உலகத்தில் உண்மையில் பேய் உண்டா? இல்லையா? என்ற ஒற்றை கேள்விக்கு விடை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் ஒயிஜா போர்டை (Ouija board) கொண்டு ஆவிகளிடம் உரையாட முடியும் என சிலர் நம்புகின்றனர். அமானுஷ்யங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் யாருக்கு தான் இருக்காது. அதிலும் சின்ன வயது என்றால் சொல்லவா வேண்டும்.. ஓயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேச முயன்ற 24 மாணவிகள் இப்போது மருத்துவமனையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்பதை இங்கு காணலாம்.
1886ஆம் ஆண்டு இறந்தவர்களுடன் பேசு வகையில் ஓயிஜோ போர்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. அதாவது ப்ளான்செட் (Planchette) எனும் அந்த சாதனம் மேல் நம் விரல்களை வைத்து கேள்வி கேட்டால், அந்த பலகை மீதுள்ள எழுத்துக்கள் நகர்ந்து பதில் வரும். இந்த போர்டை தான் ஆவிகளுடன் பேசும் “ஓயிஜா போர்டு" என்கிறார்கள். அதாவது இந்த போர்டு மூலம் நமக்கு ஆவிகள் பதில் சொல்லும் என்பது தான் கான்செப்ட். இந்த போர்டை வைத்து விளையாடியதாக கூறப்படும் கொலம்பியா மாணவிகள் கிட்டத்தட்ட 30 பேர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலேரஸ் (Galeras) கல்வி நிறுவனத்தின் தலைவர் ஹூகோ டோரஸ் (Hugo Torres) என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் சிறுமிகளுக்கு இந்த மாதிரி நடந்தது ஓயிஜோ போர்டுகளால் இருக்கலாம் என பேசப்படுகிறது. ஏனெனில் பாதிக்கப்பட்ட சிறுமிகள், தங்கள் பள்ளிகளில் ஓயிஜோ போர்டை பயன்படுத்துவதாக மாணவிகளின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சூரிய ஒளியால் வைட்டமின் டி முழுமையா கிடைக்கும்.. அதை பெற சரியான நேரம் எது தெரியுமா?
பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்போது ரொம்ப கவலையிலும், பதற்றம் (anxiety) பலவீனமாகவும் காணப்படுகிறார்களாம். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரின் கூற்றுப்படி அவர்கள் நன்கு உணவு எடுத்து கொள்ளும் குழந்தைகள் தான். இன்னும் மாணவிகளின் நிலை குறித்து பொதுமக்களுக்கு பள்ளி தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இது குறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஓயிஜோ போர்டு போலவே உண்மையும் அமானுஷ்யமாகவே உள்ளது.