தங்கத்தை வாங்குவதை விட அதை பராமரிப்பதே பெரிய விஷயம். மங்கிய நகைகளை கடையில் கொடுத்து பாலிஷ் செய்வதால் பணம் தான் வீணாகும். ஆனால், வீட்டிலுள்ள சில எளிய பொருட்களைக் கொண்டே பழைய தங்க நகைகளை நொடியில் புதுசு போல ஜொலிக்க வைக்க முடியும்!
ஒரு கிண்ணத்தில் லேசான வெதுவெதுப்பான தண்ணீரைக் எடுத்துக்கோங்க. அதில் இரண்டு சொட்டு பேபி ஷாம்பு (Baby Shampoo) அல்லது மைல்டு லிக்விட் சோப் போடுங்க. நகைகளை 15 நிமிஷம் ஊற வச்சா... அழுக்குகள் எல்லாம் தானா நீங்கி விடும்.
25
தக்காளி சாறு ட்ரிக் :
தக்காளி சாற்றுக்கு இயற்கையாகவே கறைகளை நீக்குற குணம் உண்டு. தக்காளி சாற்றை நகைகளில் தடவி 10 நிமிஷம் அப்படியே விட்டிடுங்க. அப்புறம் தேய்ச்சுக் கழுவிப் பாருங்க... தங்கம் ‘தகதகன்னு’ மின்னும்!
35
பேக்கிங் சோடா ஃபார்முலா
ரொம்ப நாளா பெட்டியிலேயே கிடந்து கருத்துப்போன நகைகளுக்கு, கொஞ்சம் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் மாதிரி ஆக்குங்க. அதை நகையில் தடவி, லேசா தேய்ச்சுக் கழுவினா... பழசு, புதுசு போல மாறிடும்.
நகையை நல்லா கழுவினதுக்கு அப்புறம், லேசா மஞ்சள் தூள் தடவி துடைக்கிறது நம்ம ஊர் பாரம்பர்ய வழக்கம். இது நகைக்கு ஒரு பிரகாசமான மஞ்சள் நிறத்தைக் கொடுப்பதோடு, கிருமிநாசினியாகவும் செயல்படும்.
55
நகைகள் மீண்டும் கருக்காமல் இருக்க...
நகை வைக்கும் பெட்டியில் ஒரு சிறிய ‘சாக் பீஸ்’ (Chalk piece) போட்டு வைங்க. அது பெட்டிக்குள் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி, நகைகள் சீக்கிரமா கருத்துப் போகாம பாதுகாக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.