Small Room Decor: உங்கள் சிறிய அறையை குறைந்த செலவில் ஒரு ஆடம்பரமான இடமாக மாற்றுவதற்கான புகைப்படங்கள், ஓவியங்கள் கொண்டு சுவர்களை அலங்கரிப்பதன் மூலம் உங்கள் அறையின் தோற்றத்தை முழுமையாக மாற்றலாம்.
இடம் குறைவாக இருந்தாலும், உங்கள் ரசனையை வெளிப்படுத்த இடமே தேவையில்லை! உங்கள் சிறிய அறையை மிகக் குறைந்த செலவில், ஒரு ஆடம்பரமான ஹோட்டல் அறை போல அல்லது ஸ்டைலான ஸ்டுடியோ போல மாற்ற இதோ சில சூப்பர் டிப்ஸ்
26
வால்பேப்பர்களின் மேஜிக்
உங்கள் அறையின் தோற்றத்தையே மாற்ற சுவர்களில் வால்பேப்பர்களை பயன்படுத்துங்கள். ஒரு சுவரை மட்டும் பிரத்யேகமான டிசைன் கொண்ட வால்பேப்பரால் அலங்கரித்தால், அந்த அறை சட்டென கிளாஸியான லுக் பெறும். மார்க்கெட்டில் தற்போது வாட்டர்-ப்ரூஃப் மற்றும் குறைந்த விலை வால்பேப்பன்கள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன.
36
சோஃபா வைப்பதில் சூட்சுமம்
இடம் குறைவாக இருக்கும் அறைகளில் சோஃபாவை அறையின் நடுவில் போடாமல், சுவரோடு ஒட்டி வைப்பது நல்லது. பிரகாசமான வண்ணங்கள் கொண்ட Compact சோஃபாக்களை தேர்ந்தெடுங்கள். இது அறையை நெரிசல் இல்லாமல், பார்க்கப் பிரம்மாண்டமாகத் தோன்றச் செய்யும்.
அறையின் மூலைகள் (Corners) வீணாகாமல் இருக்க, அங்கு நீளமான ஷோ-பீஸ்கள் அல்லது அழகான செடி வளர்க்கும் பானைகளை வைக்கலாம். சோஃபாக்களுக்கு உங்கள் அறையின் வண்ணத்திற்குத் தகுந்தாற்போல கான்ட்ராஸ்ட் குஷன் கவர்களைப் போட்டால், அறை கூடுதல் பொலிவு பெறும்.
56
சுவர்களில் நினைவுகள்
அறையின் அளவை விட, அதில் உள்ள அன்பே அழகு! உங்கள் குடும்பப் புகைப்படங்களை வெவ்வேறு அளவிலான ஃபிரேம்களில் மாட்டி, சுவரை ஒரு கலைப் பேழை (Collage) போல மாற்றுங்கள். இது உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களைக் கவரும் விதத்தில் அமையும்.
66
ஓவியங்களால் அலங்கரித்தல்
சுவர்களை வெறும் வண்ணங்களால் மட்டும் விடாமல், கண்களுக்கு இதமான இயற்கை ஓவியங்கள் அல்லது ட்ரெண்டியான மாண்டனா (Mandala) கலைப் படைப்புகளை மாட்டி வையுங்கள். இது அறையின் ஸ்டைலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். உங்கள் ரசனையைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஆச்சரியப்படுவது உறுதி
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.