Smart Summer Food Storage Hacks to Beat the Heat: வெயில் காலத்தில் உணவு சீக்கிரம் கெட்டுப் போவது ஒரு பெரிய பிரச்ச்னை.உங்கள் உணவுப் பொருட்கள் வீணாகாமல் இருக்க, இங்கே சில சூப்பர் டிப்ஸ்.
சமைத்த உணவுகளை 2 நாட்களுக்கு மேல் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டாம். குறிப்பாக, கோடை காலத்தில் அன்றன்றைக்கு சமைத்ததை அன்றே சாப்பிடுவது நல்லது.
210
தினித்த வைக்க வேண்டாமே
ஃப்ரிட்ஜில் பொருட்களை நெருக்கமாக அடைத்து வைக்காதீர்கள். பொருட்களுக்கு இடையே காற்று செல்ல இடைவெளி விடுங்கள். அப்போதுதான் கூலிங் சீராகப் பரவி, உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாது.
310
இப்படி செட் பண்ணி வைங்க
ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீசரின் டெம்ப்பரேச்சரை எப்போதும் மீடியமாக செட் செய்யுங்கள். ஃப்ரீசருக்கு -6 முதல் -24 டிகிரி வரையும், ஃப்ரிட்ஜுக்கு 0 முதல் 8 டிகிரி வரையும் ஆப்ஷன் இருக்கும். இரண்டையும் நடுவில் செட் செய்வதே சிறந்தது.
சமைத்த உணவை சூடாக ஃப்ரிட்ஜில் வைத்தால், கிருமிகள் எளிதில் உருவாகும். உணவு அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு, அதை ஃப்ரிட்ஜில் வைப்பதே சரியான முறை.
510
ஒரு முறையாவது கட்டாயம் செய்யனும்
வாரத்திற்கு ஒரு முறையாவது ஃப்ரிட்ஜை சுத்தம் செய்யுங்கள். கெட்டுப்போகும் நிலையில் இருக்கும் பொருட்களை உடனே அப்புறப்படுத்துங்கள். இல்லையென்றால், அது மற்ற பொருட்களையும் பாதிக்கும்.
610
காய்ச்சாத பாலை இப்படி
காய்ச்சாத அல்லது சூடான பாலை ஃப்ரிட்ஜில் வைத்தால் கெட்டுவிடும். பாலை நன்றாகக் காய்ச்சி, 4-5 மணி நேரம் அறை வெப்பநிலையில் ஆற வைத்த பின்னரே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
710
மீதமான சாதம் இருக்கா?
மீதமான சாதத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் கடினமாகிவிடும். இதைத் தவிர்க்க, சாதத்தை ஒரு ஏர்-டைட் டப்பாவில் போட்டு வைத்தால், அதன் ஈரப்பதம் அப்படியே இருக்கும்.
810
பேப்பர் இருக்கா?
சந்தையில் இருந்து வாங்கிய காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாகக் கழுவி, உலர வைக்கவும். பிறகு, ஒரு பேப்பர் பையில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
910
உணவு சீக்கிரம் கெட்டுவிடும்
சமைக்காத காய்கறிகளை வெஜிடபிள் பாக்ஸிலும், சமைத்த உணவுகளை (குழம்பு, சாதம்) மேல் தட்டுகளிலும் வையுங்கள். இரண்டையும் ஒன்றாக வைத்தால் உணவு சீக்கிரம் கெட்டுவிடும்.
1010
சிறிய டப்பா இருக்கா
அதிக அளவு உணவை ஒரே பெரிய டப்பாவில் வைப்பதைத் தவிர்க்கவும். சிறிய டப்பாக்களில் பிரித்து வைத்தால், உணவு முழுமையாகக் குளிர்ந்து, சீக்கிரம் கெட்டுப் போகாது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.