உங்க பழைய பைக் அதிக பெட்ரோல் குடிக்குதா? மைலேஜை 'எகிற' வைக்க 5 சீக்ரெட் டிப்ஸ்

Published : May 15, 2026, 09:48 AM IST

பழைய பைக் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய கவலையே மைலேஜ் தான். உங்கள் பழைய பைக்கை "பெட்ரோல் குடிக்கும் அரக்கனாக" மாற்றாமல், மைலேஜ் தரும் "குதிரையாக" மாற்ற இதோ சூப்பர் டிப்ஸ்.

PREV
15
ஏர் ஃபில்டரை சுத்தம் செய்யுங்கள்

நம்ம மூச்சுக்குழாய் போலத்தான் பைக்கிற்கு ஏர் ஃபில்டர் (Air Filter). இதில் தூசி அடைத்திருந்தால், எஞ்சின் அதிக பெட்ரோலை இழுத்துச் சுவாசிக்க ஆரம்பிக்கும். 2,000 கி.மீ-க்கு ஒருமுறை இதைச் சுத்தம் செய்யுங்கள்; மைலேஜ் தானாகக் கூடும்.

25
டயர் 'காத்து' - கவனிக்க மறக்காதீங்க

டயரில் காற்று குறைவாக இருந்தால், சாலைக்கும் டயருக்கும் உராய்வு (Friction) அதிகமாகும். இதனால் எஞ்சின் அதிக சக்தியைச் செலவழிக்கும். வாரம் ஒருமுறை பிரஷரைச் செக் பண்ணுங்க. முக்கியமாக, நைட்ரஜன் காற்று ட்ரை பண்ணி பாருங்க, வண்டி லேசாக ஓடும்!

35
செயின் லூப் - ஸ்மூத் டிரைவிங்

உங்கள் பைக்கின் செயின் காய்ந்து போய் (Dry) இருந்தால், அது எஞ்சினுக்குப் பாரத்தைக் கொடுக்கும். பழைய பைக்காக இருந்தால், 500 கி.மீ-க்கு ஒருமுறை தகுந்த Chain Lube பயன்படுத்துங்கள். செயின் தளர்வாக இல்லாமல் சரியான டைட்டில் இருக்கிறதா என்று மெக்கானிக்கிடம் செக் செய்யுங்கள்.

45
தேவையற்ற "ஆக்சிலரேட்டர்" முறுக்கல்

நிறைய பேர் சிக்னலில் நின்று கொண்டு தேவையில்லாமல் ஆக்சிலரேட்டரை முறுக்கிக் கொண்டிருப்பார்கள். பழைய பைக்குகளுக்கு இது 'எமன்'. சீரான வேகத்தில் (40-50 kmph) செல்வது உங்கள் பர்ஸில் பணத்தைச் மிச்சப்படுத்தும். 'சடன் பிரேக்' போடுவதைத் தவிர்த்தாலே மைலேஜ் எகிறும்!

55
தரமான ஆயில்... சரியான இடைவெளி

பழைய வண்டி தானே என்று சாதாரண ஆயிலை ஊற்றாதீர்கள். எஞ்சின் ஆயில் கருப்பாகிவிட்டால், அது எஞ்சினைச் சூடாக்கி பெட்ரோலை உறிஞ்சும். நல்ல குவாலிட்டி Semi-synthetic அல்லது Mineral oil பயன்படுத்துவது எஞ்சின் ஆயுளையும் கூட்டும், மைலேஜையும் கொடுக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories