
ஒருவரது கையெழுத்து அவரது தலையெழுத்தையே மாற்றும் என்று பலர் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும், ஒருவரது கையெழுத்து அழகாக இருந்தால், அவரது வாழ்க்கையும் அழகாக மாறும் என்பதால், ஒவ்வொரு மாணவர்களுக்கும் கையெழுத்து அவர்களது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒருவேளை, கையெழுத்து மிகவும் மோசமாக இருந்தால் அதை படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் மிகவும் கடினமாக இருக்கும். இதன் தாக்கம் தேர்வில் தான் தெரியும். நிறைய பேர் தேர்வை எவ்வளவுதான் நன்றாக எழுதினாலும், குறைவான மதிப்பெண் எடுப்பதற்கு முக்கிய காரணம் அவர்களது கையெழுத்து தான்.
இத்தகைய சூழ்நிலையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கையெழுத்தை மேம்படுத்துவது அவர்களுக்கு சில நேரங்களில் பெரிய சவாலாக இருக்கும். காரணம், குழந்தைகளின் கவனம் மொபைல் மற்றும் டிவியில் அதிகமாக இருக்கும். மேலும் பெற்றோர்கள் சொல்வதை அவர்கள் காது கொடுத்து கூட கேட்க மாட்டார்கள். இதுதவிர, எழுதும் போதும் கூட குழந்தைகள் முழுகவனத்துடன் கேட்கமாட்டார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தையின் எழுத்தை அழகாக மாற்ற எளிய வழி உள்ளது. அதுதான் பேனா பயிற்சி. என்ன பேனா பயிற்சியா? இது என்ன புதுசா இருக்கே என்று ஆச்சரியப்படுறீங்களா? ஆம், இந்த பயிற்சியை தினமும் உங்க குழந்தையை சுமார் 2 நிமிடம் தொடர்ந்து 10 நாட்கள் செய்ய வைத்தால், கண்டிப்பாக நல்ல மாற்றம் தெரியும். அதுமட்டுமின்றி, இந்த பயிற்சி உங்கள் குழந்தை என் கைப்பிடியை வலுப்படுத்தும், எழுதும் வேகம் அதிகரிக்கும், தெளிவு மேம்படுத்தும். மேலும் இந்த பயிற்சி உங்கள் குழந்தை முழு கவனம் செலுத்த உதவும்.
உங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக்க பயிற்சி :
முதலில் ஒரு பேப்பரில் செவ்வகத்தை மறையுங்கள். அதன் இருபுறமும் முக்கோணத்தை வரையவும். பின் முக்கோணத்தில் ஒரு பெரிய வட்டத்தை உருவாக்கி, அதை மறு முனை வரை கொண்டு செல்லுங்கள். அதாவது, பேனாவை கடிகாரத்தை போல சுற்றிக் கொண்டு செல்லவும்.
அதேபோல கீழ் முக்கோணத்திலும் இப்படியே செய்யுங்கள்.
இப்போது மற்றொரு செவ்வகத்தை வருது எதிர் திசையில் ஒரு முக்கோணத்தை வரையவும். மேலே சொன்ன படி, மீண்டும் வட்டத்தை வரையவும். ஆனால், வட்டத்தை நீங்கள் வரையும் போது அதை பின் நோக்கி வரையவும்.
இதையும் படிங்க: மூர்க்கமாக கோபப்படும் டீன்ஏஜ் பசங்க கிட்ட 'இப்படி' தான் பேசனும்!!
இதுதவிர சில டிப்ஸ் :
1. தினமும் உங்கள் குழந்தை எழுதி பார்ப்பதற்கு என ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். இது அவர்களது கையெழுத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தொடக்கமாகும். வீட்டு பாடங்களைத் தவிர படிக்கும் பாடங்களையும் எழுதி பார்க்க வையுங்கள் இதனால் அவர்களது கையெழுத்தும் நன்றாகும் படிக்கும் பாடமும் நினைவில் பதியும்.
அவர்களது எழுத்து அழகாக அதற்கேற்ப கவரும் வகையிலான எழுத்துப் பொருட்களை அவர்களுக்கு வாங்கி கொடுங்கள். இதன் மூலம் அவர்களது ஆர்வம் அதிகரிக்கும்.
2. இவ்வளவு நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும் என்ற கண்டிஷனை அவர்களிடம் வைக்காதீங்க. இதனால் அவர்கள் அவசர அவசரமாக எழுதிப் பார்க்கும் மனநிலைக்கு வந்து விடுவார்கள். ஆனால், தேர்வு சமயத்தில் மட்டும் வேகமாக எழுத சொல்லுங்கள். கூடவே எழுத்தும் மோசமாகாமல், பார்ப்பதற்கு அழகாக இருக்க அவர்களை தயார்ப்படுத்துங்கள்.
3. உங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இருக்க அவர்கள் பயன்படுத்தும் பேனா தேர்வில் கவனம் அவசியம். ஆம், சரியான பேனாவை பயன்படுத்தினால் எழுதும் எழுத்தும் அழகாக மாறும். அதுமட்டுமின்றி, எழுத்தின் மீதும் அவர்களுக்கு ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். மேலும் உங்கள் குழந்தைகள் எழுதும் போது அவர்களது கைகள் நிதானமாக இருக்க வேண்டும். எனவே, உங்கள் குலதெய் எழுத்து அழகாக, அவர்களுக்கு நல்ல ஒரு பேனாவை வாங்கி கொடுங்கள்.
4. உங்கள் குழந்தையின் எழுத்தை மேம்படுத்த அவர்களை கோடு போட்ட வரிகள் கொண்ட பேப்பரில் எழுத முதலில் பழக்கப்படுத்துங்கள். இதன் மூலம் அவர்கள் எழுத்து, பார்ப்பதற்கு அழகாகவும், நேர் வரிசையிலும் இருக்கும்.
5. உங்களுக்கு குழந்தை எழுதி பழகும் போது அவர்கள் சரியான தோரணையில் அமர்ந்து உட்கார்ந்திருக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது அவர்கள் மேஜையில் கைகளை வைத்தபடி நிமிர்ந்து நிலையில் உட்கார்ந்து எழுதுவதுதான் சரியான நிலையாகும். முக்கியமாக, அவர்கள் எழுதும் போது கட்டை விரலுக்கு தான் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், பேனாவையும் கைவிரல்கள் அழுத்திப் பிடித்திருக்க வேண்டும் என்றும், மற்றும் கைவிரலும் பேனாவும் ஒரே உயர் நிலையில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்களது எழுத்து வடிவம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
இதையும் படிங்க: துரித உணவில் கலக்கும் அந்த 'ஒரு' பொருள்.. இரவில் கொடுத்தால் குழந்தைகளுக்கு பேராபத்து!!