தற்போது, அம்பானி குடும்பம் முகேஷ் அம்பானியின் தலைமையில் உள்ளது, அவர் உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். தங்கள் உத்திகள், மதிப்புகள், தொலைநோக்கு மற்றும் சிறந்து விளங்குவதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றில் அம்பானி குடும்பம் வேரூன்றியுள்ளது. முகேஷ் அம்பானியின் வெற்றிக்கான அணுகுமுறை வலுவான பணி நெறிமுறை, சவால்களை எதிர்கொள்ளும் உந்துதல் மற்றும் நீண்ட கால இலக்குகளில் அசைக்க முடியாத கவனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
அம்பானி குடும்பத்தின் வெற்றிக்கு ஒரு திறவுகோல், குறிப்பாக தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வர்த்தகத் தொழில்களில், மாறிவரும் காலங்களுக்கு ஏற்றவாறு தொடர்ந்து புதுமைகளை உருவாக்கிக் கொள்ளும் திறன் ஆகும். வெற்றியை அடைய அம்பானி குடும்பத்திடமிருந்து அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய சில முக்கியமான பாடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வழக்கமான உடற்பயிற்சி
நம் உடல் தகுதியை பராமரிப்பதே எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். அம்பானி குடும்பம் தங்கள் உடல் நலனை பராமரிக்க வழக்கமான உடற்பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது. யோகா பயிற்சி, நடைபயிற்சி மற்றும் நீச்சல் போன்ற உடல் செயல்பாடுகளுக்கு அம்பானி குடும்பத்தினர் முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கின்றன. அவர்கள் தங்களின் பிசியான கால அட்டவணையில் உடற்பயிற்சியை ஒருபோதும் கைவிடுவதில்லை. இதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.