கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலயா? ஒரு எலுமிச்சை பழம் போதும்.. இப்படி பண்ணி பாருங்க!

First Published Jan 18, 2023, 5:31 PM IST

வீட்டு கழிவறைகள், சமையலறைகளில் ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகளை ஒழிக்க எளிய வீட்டு உபயோக குறிப்புகளை இங்கு காணலாம்.

வீட்டில் நிம்மதியாக இருக்க விடாமல் தொந்தரவு கொடுக்கும் பூச்சிகளில் கரப்பான் பூச்சியும் ஒன்று. இரவில் மின்விளக்கை போட்டால் அவை அங்கும் இங்கும் ஓடி திரிவது எரிச்சல் அளிப்பதோடு, சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். சமையலறையில் பாத்திரங்கள் மீது ஓடுவதை நினைத்தாலே அருவருப்பு ஏற்படும். அவற்றை ஒழிப்பது குறித்து இங்கு காணலாம். 

கரப்பான் பூச்சி ஏன் வருகிறது? 

வெப்பமான, ஈரப்பதமான சூழலில் கரப்பான் பூச்சி வாழுகின்றன. பழமையான, ஈரமான பூஞ்சைகள் பிடித்த மர கதவுகள், ஜன்னல்கள் இருக்கும் வீட்டில் கரப்பான் பூச்சி உலா வரும். 

கரப்பான் பூச்சி ஒழிய... டிப்ஸ் 1:

இரவில் தூங்க செல்லும் முன்பு கொஞ்சம் ப்ளீச்சிங் பவுடரை எடுத்து கழிவறையிலும், குளியலறையிலும் தூவி விடுங்கள். இதை காலையில் சுத்தம் செய்தால் போதும். இரவில் ப்ளீச்சிங் பவுடர் தூவுவதால் கரப்பான் பூச்சித் தொல்லை குறையும். 

கரப்பான் பூச்சி ஒழிய... டிப்ஸ் 2 

பல மருத்துவ பலன்கள் கொண்ட இலவங்கப்பட்டையை தூளாக்கி கொஞ்சம் உப்பு கலந்து கரப்பான் பூச்சி திரியும் இடங்களில் தெளியுங்கள். இந்த இலவங்கப்பட்டை தண்ணீர் கரப்பான் பூச்சிகளையும், அதன் முட்டைகளையும் ஒழிக்கும் தன்மை உடையது. 

இதையும் படிங்க: Negative Thinking: எப்பவுமே எதிர்மறை சிந்தனை.. நிம்மதியே இல்லையா? இந்த கதையை படிச்சா ஆளே மாறிடுவீங்க!

கரப்பான் பூச்சி ஒழிய... டிப்ஸ் 3

சூடான தண்ணீரில், எலுமிச்சை சாறு விட்டு கொள்ளுங்கள். கொஞ்சம் பேக்கிங் சோடா போட்டு நன்கு அடித்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை கொண்டு சமையலறை மேடை, சிங்க் அதனை சுற்றிய பகுதிகள், கழிவறையில் தெளித்து சுத்தப்படுத்துங்கள். அதிகமாக கரப்பான் பூச்சிகள் இருந்தால் ஒரு நாளுக்கு மூன்று முறை கூட சுத்தம் செய்யலாம். 

இந்த டிப்ஸில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்து வர கரப்பான் பூச்சிகளை முற்றிலும் ஒழிக்கலாம்.

இதையும் படிங்க: கவலைகள் நீக்கும் 'தை' மாத முக்கிய விரதங்கள் எப்போது இருக்க வேண்டும்? என்னென்ன பலன்கள் முழுவிவரங்கள்!

click me!