Fish vs chicken: மீன் vs சிக்கன்.. சீக்கிரமா எடையை குறைக்க எது பெஸ்ட்!

First Published Jan 14, 2023, 3:41 PM IST

Fish vs chicken: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிக்கன், மீன் இந்த இரண்டு உணவுகளில் எது சிறந்தது என்பது குறித்து இங்கு காணலாம். 

தங்களுடைய உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்து ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும் என்றே எல்லோரும் விரும்புவர். நாம் எவ்வளவுதான் உடற்பயிற்சியில் சாகசங்களை செய்தாலும், உடல் எடையை குறைக்கும் செயல்பாட்டில் உணவின் பங்கு தான் அதிகம் உள்ளது. உடற்பயிற்சி வெறும் 20 விழுக்காடு மட்டுமே பலன் அளிக்கும். அதனால் தான் அசைவ பிரியர்கள் உடல் எடையை குறைப்பதில் திக்குமுக்காடி போகிறார்கள். ஆனால் சரியான உணவு பழக்கம், அவர்களை எடை குறைப்பை நோக்கி அழைத்து போகும். 

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் வழக்கமான உடற்பயிற்சியுடன், நல்ல புரத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். கொழுப்பு உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும். நமக்கு நீண்ட நேரத்திற்கான ஆற்றலை புரதம் வழங்குகிறது. அதுவே நம்முடைய தசைகளையும் வலுப்படுத்தும். புரதம் பிரதானமாக கிடைக்கும் உணவுகளில் மீனும், சிக்கனும் அடங்கும். இருப்பினும் உடல் எடையை குறைக்க விரும்புவோர் எதை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம். 

இதையும் படிங்க: Bananas: தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

Latest Videos


மீன் ஏன் சிறந்தது? 

ஆய்வுகளின் படி, மற்ற வகை புரதங்களுடன் ஒப்பிடும்போது மீன் எடுத்து கொள்வது நிறைவாக உண்ட உணர்வை தருகிறது. மீனில் அதிக கலோரிகள் இல்லை. மீன் உண்பதால் தசைகள் வலுவாகும்; அதிக ஆற்றலும் கிடைக்கும். இதில் நல்ல கொழுப்புச்சத்து வகையை சேர்ந்த ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. தொடர்ந்து 8 வாரங்களுக்கு அசைவ உணவுகளில் வேறு எதுவும் உண்ணாமல் மீன் மட்டுமே சாப்பிட்டவர்கள், மீன் சாப்பிடாதவர்களை விட கணிசமான எடையை குறைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதே சமயம் கருவாடு எடுத்து கொண்டால் அதிக கலோரிகள் கிடைக்கும். எடையை கூட்ட விரும்பினால் கருவாடு உண்ணலாம். 

சிக்கன் ஏன் சிறந்த உணவு? 

உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள் சிக்கனை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதில் புரதம் அதிகம் காணப்படுவதால் உடலையும், தசையையும் வலுப்படுத்துகிறது. தொடர்ந்து சிக்கன் எடுத்துக் கொள்ளும்போது எலும்புகள் பலப்படுகின்றன. இது பசியை குறைக்கும். பொரித்த சிக்கன், அதிக பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை உண்ணுதல் கூடாது. 

இதையும் படிங்க: Onion juice: இந்த மாதிரி வெங்காய சாறு தேய்த்து குளியுங்கள்..நீங்கள் நினைத்து பார்த்து முடியாத அளவு முடி வளரும்

எடை இழப்புக்கு எது நல்லது? 

குறைந்த உப்பு சேர்த்து சமைக்கப்பட்ட கோழி கறி, சிக்கன் சூப்களை எடை குறைக்க நினைப்பவர்கள் எடுத்து கொள்ளலாம். நீராவியில் மசாலா பொருட்கள் அதிகம் சேர்க்காமல் வேக வைக்கப்பட்ட நாட்டுகோழி கறியை எடுத்துக் கொள்ளும்போது புரதச்சத்து அதிகமாக கிடைக்கிறது. உடல் எடையை குறைப்பவர்கள் மீனை விட சிக்கனை எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 

மீனும் கோழியை விட சிறந்த உணவாக குறிப்பிடப்படுகிறது. மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இதயத்திற்கு நல்லது. இரண்டு உணவுகளையுமே உடல் எடையை குறைப்பவர்கள் அளவாக எடுத்துக் கொள்ளலாம். அதிகப்படியான புரதம் உடலில் சேருவதால் உடல் எடையை அதிகரிக்கலாம்.

நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவை தேவைக்கு ஏற்றபடி அளவோடு எடுத்துக் கொள்வதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். கோழிக்கறி அல்லது மீன் இரண்டுமே எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றதுதான். இதனை எப்படி முறைப்படுத்தி சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் போதும். உடல் எடை குறையும். 

இதையும் படிங்க: Sugarcane benefits: பொங்கல் அப்போ சாப்புடுற கரும்புல இவ்வளவு நன்மையா? இது தெரிஞ்சா கட்டாயம் சாப்பிடுவீங்க!

click me!