பண்டிகைகளில் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வது என்பது மகிழ்ச்சியை பகிர்தல். அதனால் தான் எல்லா பொங்கல் பண்டிகையிலும் வாழ்த்துகள் தெரிவிப்பது முக்கிய அங்கமாக உள்ளது. இந்தாண்டின் பொங்கல் விழாவானது நாளை (ஜன.14) போகி பாண்டிகையுடன் தொடங்குகிறது. சமயங்கள் கடந்து அனைவரும் கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் பகிர கூடிய வாழ்த்துகளை இங்கு காணலாம்.
பொங்கல் வாழ்த்துகள்!
1). பொங்கலை போலவே இனிமையான உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.
2). அன்னை போல நம்மை வாழ வைக்கும் தமிழோடு இன்பமாய் வாழ இனிய பொங்கல் வாழ்த்துகள்.
3). தைப் பொங்கலில் உணவளிக்கும் உழவர்களையும், இயற்கையும் நன்றியோடு நினைப்போம். இனிய பொங்கல் வாழ்த்துகள்.
4). பொங்கலோ பொங்கல்! தை பிறந்தால் வழி பிறக்கும். பிரச்சனைகள் தீர்ந்து பிடித்தது போலவே வாழ்க்கை அமைய வாழ்த்துகள்.
5). இனி எல்லாம் இன்பமாய் அமைய இனிய பொங்கல் வாழ்த்துகள்.
6). மதம், சாதி கடந்து தமிழர்களாய் நம்மை இணைக்கும் பொங்கல் விழா வாழ்த்துகள்.
7). உங்கள் வீட்டில் இன்பம் பொங்க இனிய பொங்கல் வாழ்த்துகள்.
இதையும் படிங்க: Pongal 2023: பொங்கல் பண்டிகையில் நற்பலன் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானம் செய்யணும் தெரியுமா?