எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கத் தான் ஆசைபடுகிறோம். ஆனால் தவறான உணவு பழக்கம், போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற பல காரணங்களால் ஏதேனும் ஒரு நோய் நமக்கு வந்துவிடுகிறது. நம் உடலின் சுரப்பிகளும் இதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஹார்மோன்கள் சமநிலையில் இல்லாமல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரந்தாலும் சில நோய்கள் ஏற்படுகின்றன. அதில் தைராய்டு ஹார்மோன் மிக முக்கியமானது. நம் உடலின் தலைமை ஹார்மோனே அதுதான்.
தைராய்டு என்ற ஹார்மோன் நம்முடைய கழுத்தில் காணப்படும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. நம் கழுத்தின் முன்புறத்தில் காணப்படுகிறது. இது தான் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைக்கும். உடலில் உள்ள செல்களை எல்லாம் கட்டுப்படுத்துவது தைராய்டு சுரப்பி தான். தைராய்டு ஹார்மோன் உடலின் அனைத்து செயல்முறைகளையும் கட்டுப்படுத்துகிறது. இந்த சுரப்பியில் ஏற்படும் தொந்தரவுகள் தைராய்டு தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும்.
தைராய்டு பிரச்சனையின் அறிகுறிகள்
எடை குறைதல்/ அதிகமாதல்
முடி உதிர்வு
தசைகளில் பலவீனம், வலி
அதிகமான பசி
நரம்புத் தளர்ச்சி
தூக்கமின்மை
எரிச்சல்
அதிக வியர்வை
படபடப்பு
தைராய்டு ஏற்பட 3 காரணங்கள்
1. செலினியம் குறைபாடு
2. கார்போஹைட்ரேட் காலை உணவு
3. பசையம் நுகர்வு
செலினியம் குறைபாடு
தைராய்டு செயல்பாட்டிற்கு தேவையான ஊட்டச்சத்து தான் செலினியம். இது நம் உடலில் இருப்பது ஆட்டோ இம்யூன் நோய் தூண்டுதல்களைத் தவிர்க்கும். இந்த சத்து குறைபாடு ஏற்பட்டால் தைராய்டு சுரப்பை பாதிக்கும். செலினியம் தைராய்டு சுரப்பியை வீக்கத்திலிருந்து பாதுகாக்கிறது . நல்ல ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு முடி உதிர்வதையும் தடுக்கிறது. காளான், முட்டை, சீஸ், சால்மன் மீன் ஆகியவை செலினியம் அதிகமுள்ள உணவுகள்.