samantha : சமந்தா 8 மாசமா இவ்வளவு கஷ்டபடுகிறாரா? அவரே பகிர்ந்த 'மயோசிடிஸ்' நோயின் பயங்கரமான அறிகுறிகள்..

First Published Mar 30, 2023, 4:12 PM IST

samantha health: நடிகை சமந்தா கடந்தாண்டு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோய்க்கு தொடர் சிகிச்சைகளை எடுத்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட காலம் முதல் தான் பட்ட கஷ்டங்களை இப்போது பகிர்ந்துள்ளார். 

நடிகை சமந்தா எளிய பின்னணியில் இருந்து வந்தவர். அவருடைய நேர்காணல்கள் தன்னம்பிக்கை அளிப்பவையாக இருக்கும். அண்மையில் அவர் அளித்த பேட்டிகளில் தான் நோய் பாதிப்பால் பட்ட துன்பங்களை பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 3 மாதங்கள் சொல்லவே முடியாத கஷ்டங்களை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார். உடல்நிலை மோசமாகி வருவதால் சில காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுப்பதை பற்றி யோசிப்பதாகவும் கூறியிருக்கிறார். அப்படி என்ன மாதிரியான நோய் பாதிப்புகளை மயோசிடிஸால் அவர் அனுபவித்தார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக சமந்தாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது. எந்த அளவுக்கு என்றால் அவருடைய தசைகள் பயங்கர வலியை கொடுத்துள்ளன. எலும்புகள் பலவீனமாகி அவர் சோர்ந்துவிட்டார். சில நாட்களில் படுக்கையில் இருந்து எழுவது கூட சமந்தாவிற்கு சிரமமாக இருந்துள்ளது. அந்த சோம்பல், இயலாமையை எதிர்த்துப் போராட வேண்டும் என பல முறை நினைத்ததாகவும் சமந்தாவே கூறியுள்ளார். 

சமந்தாவுக்கு கடுமையான ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தலைவலியால் சாதாரணமான செயல்களை செய்வது கூட கடினமாக இருப்பதாகவும் பகிர்ந்துள்ளார். ஒரு பேட்டியில் சமந்தா,"ஒரு நாள் வாளிப்பாகவும் (puffy), ஒரு நாள் குண்டாக (fat) இருக்கிறேன், ஒரு நாள் உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன். என்னுடைய தோற்றத்தில் எனக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை"என கூறியுள்ளார். அதுமட்டுமில்லை கண்களில் கூட வலியை அனுபவித்துள்ளார். 

மயோசிட்டிஸுடனான தனது போராட்டத்தில், சமந்தா கண்களில் பெரும் வலியை அனுபவித்துள்ளார். கண்களில் ஊசி குத்துவது போன்ற வலியுடன் காலை படுக்கையில் இருந்து எழுவாராம். "அவரது கண்களில் கடுமையான வலி, கண்கள் வீங்கி சில நாள்கள் மோசமாக விடிகிறது. கடந்த 8 மாதங்களாக இப்படி அவதியுறுவதாக" சமந்தா பேட்டியில் கூறியுள்ளார். நாள்கணக்கில் அல்ல மாதக்கணக்கில் கண்களில் வலி என்றால்... யாரால் தான் தாங்க முடியும். 

இதையும் படிங்க: அம்பானி வீட்டு வேலைக்காரங்க கூட இவ்வளவு படிச்சிருக்கணுமா? இந்த கல்வி தகுதி இருந்தா போதும் 2 லட்சம் சம்பளம்..!

மயோசிடிஸ் நோய் வந்த ஒருவர் நிறைய தடுமாற்றங்களை சந்திக்க நேரிடும். பலவீனமாகி கீழே விழும் நிலை கூட ஏற்படும். மயோசிடிஸ் நோய் பாதிக்கப்பட்ட பிறகு நடப்பதும், நிற்பதும் கூட சிரமம் தான். கொஞ்ச நேரம் ஆக்டிவாக நடந்தால் அல்லது நின்றால் அவர்கள் மிகவும் சோர்வடைகிறார்கள். அதில் சமந்தாவும் விதிவிலக்கல்ல.. தன்னுடைய சமூக வலைதளங்களில் சமந்தா நோய் பாதிப்பு குறித்து அவ்வப்போது பகிர்வார். அதில்கூட தான் பலவீனமாகவும், தசைகளில் வலியை அனுபவிப்பதாகவும் பகிர்ந்துள்ளார். அவருடைய இந்த போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்பது ரசிகர்களின் மனக்குமுறலாக உள்ளது. 

இதையும் படிங்க: வாழைப்பழம் தான நல்லதுனு சொல்வாங்க.. ஆனா வாழைத்தண்டு சாறு 1 டம்ளர் குடித்தால்.. இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!

click me!