வீட்டில் ஈக்கள் ரொம்ப மொய்க்குதா? ஒரு கிராம்பு போதும்.. ஈக்களை ஓட ஓட விரட்டும் 5 டிப்ஸ்..!

First Published Mar 30, 2023, 3:08 PM IST

How to avoid House flies: வீட்டில் ஈக்கள் தொல்லை தாங்கலயா? இந்த டிப்ஸை பயன்படுத்தினால் ஒரு ஈ கூட வீட்டில் இருக்காது. 

கோடைகாலங்களில் வீட்டில் ஈக்கள் தொந்தரவு அதிகமாகிவிடும். அவை அங்குமிங்கும் சுற்றி திரிவது நமக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனாலும் வெளியில் கண்ட இடங்களில் திரிந்த ஈக்கள், அப்படியே வந்து உணவின் மீதும், நம் மீதும் மொய்ப்பது நல்ல விஷயம் இல்லை. ஊதுவத்தி, சுருள்கள், ஸ்ப்ரே உள்ளிட்ட பல வழிகளில் நாம் ஈக்களை விரட்டிய அடிக்க நினைத்தாலும் அவை கொஞ்ச நேரத்தில் மீண்டும் வந்து தொல்லை செய்யும். அவற்றை விரட்டியடிக்க சில வீட்டு குறிப்புகளை பயன்படுத்தலாம். 

திறந்தவெளியில் கிடக்கும் மலங்கள், குப்பைகள் மீது திரிந்துவிட்டு அப்படியே ஈக்கள் நம்மையும், வீட்டிலுள்ள உணவு பொருள்களையும் மொய்ப்பதை நினைத்தாலே அருவருப்பு வந்துவிடும். இதனால் நோய்களும் ஏற்படுகின்றன. வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படும். 

ஈக்களை விரட்ட டிப்ஸ் 

1). வினிகரின் மணம் ஈக்களுக்கு ஒத்துவராது. ஒரு பாத்திரத்தை எடுத்து அயில் கால் கப் வினிகர், யூக்கலிப்டஸ் எண்ணெய் ஆகியவை கலந்து கொள்ளுங்கள். அதனை வீட்டில் உள்ள வேண்டாத காலியான பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள். அதன் மூடியில் ஒரு துளையிட்டு, ஈக்கள் வரும் இடங்களில் ஸ்ப்ரே செய்யுங்கள். உங்கள் வீட்டில் இதற்கென ஸ்ப்ரே பாட்டில் இருந்தால் அதையே பயன்படுத்துங்கள். 

ஈக்களை விரட்ட டிப்ஸ் 

2). ஆப்பிள் பழத்தை துண்டுகளாக நறுக்கி அதில் கிராம்பு சொறுகி ஈக்கள் வரும் இடத்தில் வைத்து விடுங்கள். ஈக்கள் மொய்க்காது. இந்த நறுமணம் கூட ஈக்கள் விரும்பாது என்கிறார்கள். 3). உப்பு போட்ட தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து, அதனை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, சமையலறை மூலைகளில் தெளியுங்கள். உப்பு நீர் கிருமிநாசினி. அதை தெளிப்பதால் ஈக்கள் வராது. 

ஈக்களை விரட்ட டிப்ஸ்  

4). வினிகருடன் பாத்திரம் துலக்கும் சோப்பு தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். இதனை சமையலறை திண்டு, அடுப்பு, ஈக்கள் குவியும் இடங்களில் ஸ்ப்ரே செய்து துடைத்து விடுங்கள். ஈக்கள் வராது. இந்த வீட்டு குறிப்புகள் உங்களுக்கு உதவும். அதே நேரம் சில விஷயங்களை நீங்கள் சரியாக செய்ய வேண்டும். அது கொஞ்சம் கடினம் தான் முயன்று பாருங்கள். 

இதையும் படிங்க: வாழைப்பழம் தான நல்லதுனு சொல்வாங்க.. ஆனா வாழைத்தண்டு சாறு 1 டம்ளர் குடித்தால்.. இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!

ஈக்களை விரட்ட டிப்ஸ்

5). துளசி வாசனை ஈக்களுக்கு பிடிக்காது. வீட்டில் துளசி செடியை வைத்தால் ஈக்களின் தொல்லை நீங்கும். துளசி ஸ்ப்ரே தயாரிக்க ஒரு கைப்பிடி துளசியை எடுத்து தண்ணீரில் கொதிக்க வையுங்கள். கொஞ்சம் துளசியை நசுக்கி வைத்து கொள்ளுங்கள். கொதித்த துளசி தண்ணீரை இறக்கி குளிர செய்து, அதனுடன் நசுக்கிய துளசி இலைச்சாற்றை கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்துங்கள். 

ஈக்களை விரட்ட டிப்ஸ் 

வீட்டில் குப்பைகள் அதிகம் சேரும்போது ஈக்கள் வருவதை தடுக்க முடியாது. கழிவு நீர் திறந்து கிடப்பது, உணவுகள் வீணாகும்போது அவற்றை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டு விடுவது, பாத்திரங்களை சரியாக சுத்தம் செய்யாமல் போட்டு வைப்பது போன்றவை ஈக்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிடும். முறையாக வீட்டை சுத்தம் செய்தால் ஈக்கள் தொந்தரவு இருக்காது. உணவு பொருள்களை திறந்து வைக்காதீர்கள். ஈக்கள் வராது. 

இதையும் படிங்க: பஞ்சு போல சாஃப்ட் இட்லிக்கு இந்த டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க..!

click me!