Fridge : சூப்பர் ட்ரிக்... பிரிட்ஜில் உப்பு வைத்தால் இவ்வளவு பலன் கிடைக்குமா?

Published : Jun 29, 2026, 12:04 PM IST

Fridge Hack : நம்ம வீட்டு பிரிட்ஜ்ல தினமும் பால், காய்கறி, பழங்கள்னு நிறைய வைப்போம். ஆனா, எப்போதாவது ஒரு கிண்ணத்துல உப்பை வெச்சிருக்கீங்களா? இந்த சின்ன ட்ரிக்ஸ் பெரிய பலனைத் தரும்!

PREV
16
ஒரு சிம்பிள் 'ஹேக்'

நம்ம அன்றாட வாழ்க்கையில பிரிட்ஜ் பயன்பாடு ரொம்பவே அதிகம். குறிப்பாக, கோடைக்காலத்துல பால், காய்கறிகள், மீதமுள்ள உணவுகள் கெட்டுப்போகாம இருக்க இது ரொம்ப முக்கியம். இந்த சிம்பிள் 'ஹேக்' உங்க பிரிட்ஜை சூப்பரா வெச்சுக்க உதவும்.

Fridge : உங்க பழைய ஃபிரிட்ஜை ஈஸியா புதுசு மாதிரி மாத்தலாம்... இந்த 3 டக்கரான ஐடியாஸ் பாலோ பண்ணுங்க..!

26
1. காய்கறிகள் நீண்ட நாட்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்

பிரிட்ஜ்ல வெச்ச வெள்ளரிக்காய், சுரைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் சீக்கிரம் வாடிவிடக் கூடாதுனு நினைப்போம். ஆனா, பிரிட்ஜில் ஈரப்பதம் (Moisture) அதிகமானா, காய்கறிகள் சீக்கிரம் அழுக ஆரம்பிக்கும். ஒரு கிண்ணத்துல உப்பை போட்டு காய்கறிகள் பக்கத்துல வெச்சா, அது அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சிடும். இதனால காய்கறிகள் பல நாட்கள் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!

36
2. துர்நாற்றம் காணாமல் போகும்
பிரிட்ஜ்ல காய்கறி, பால், மாவு, பிரெட்னு எல்லாத்தையும் ஒண்ணா வைக்கும்போது, சில சமயம் ஒரு மாதிரி கெட்ட வாசனை வரும். உப்பு நிரப்புன ஒரு கிண்ணத்தை பிரிட்ஜோட ஒரு மூலையில வெச்சா, அது கெட்ட வாசனையை உறிஞ்சி, உள்ள இருக்கிற காற்றை ஃப்ரெஷ்ஷா வைக்கும்.
46
3. உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போகாது
பிரிட்ஜை அடிக்கடி திறக்குறதால, வெளியில இருந்து காத்து உள்ளே போய் ஈரப்பதம் அதிகமாகும். இதனால உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்பிருக்கு. உப்பு இந்த அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சுறதால, உணவுப் பொருட்கள் அதிக நாள் பாதுகாப்பா இருக்கும். பிரிட்ஜும் சரியா வேலை செய்யும்.
56
4. ஃப்ரீசரில் அதிக ஐஸ் சேராது
பழைய மாடல் அல்லது சிங்கிள் டோர் பிரிட்ஜ்கள்ல, ஃப்ரீசர்ல அதிகமா ஐஸ் சேர்றது ஒரு பெரிய பிரச்சினை. இதனால பிரிட்ஜ்ல இடமும் கம்மியாகும், கூலிங்கும் சரியா இருக்காது. ஃப்ரீசரை சுத்தம் செஞ்ச பிறகு, அங்கே கொஞ்சம் உப்பைத் தூவி விட்டா, அடிக்கடி ஐஸ் கட்டியாகுற பிரச்சினையைத் தடுக்கலாம்.
66
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்
கிண்ணத்துல வெச்ச உப்பு, ஈரப்பதத்தை உறிஞ்சி ஈரமாகிவிடும். அதனால, ஒவ்வொரு 15-20 நாட்களுக்கு ஒருமுறை அந்த உப்பை மாத்த மறக்காதீங்க. இந்த சின்ன டெக்னிக்கை பயன்படுத்துறதால, உங்க உணவுப் பொருட்கள் வீணாகுறது குறையும், உங்க பணமும் ஆயிரக்கணக்குல மிச்சமாகும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories