டிஷ்யூ பேப்பரை ஃபிரிட்ஜில் வைப்பதில் ஒரு சரியான முறை இருக்கிறது. அதை கீழே உள்ள வழிமுறைகளின்படி செய்யலாம்:
1.காய்கறிகளைக் கழுவி, நன்றாக உலர வைக்கவும்: காய்கறிகளை வாங்கி வந்ததும் கழுவிவிட்டு, தண்ணீரே இல்லாதவாறு முழுமையாக உலர வைக்க வேண்டும். ஈரமான காய்கறிகளின் மேல் டிஷ்யூ பேப்பரை வைத்தால் அது சீக்கிரம் கிழிந்துபோய், பலன் தராது.
2.டிஷ்யூ பேப்பரை லைனிங் செய்யவும் : காய்கறிகளை வைக்கும் பிளாஸ்டிக் கவரிலோ அல்லது ஃபிரிட்ஜின் கீழ் உள்ள காய்கறி டிராயரிலோ (Crisper Drawer) அடியில் இரண்டு அடுக்கு டிஷ்யூ பேப்பரை விரித்து வைக்கவும்.
3.அவ்வப்போது சரிபார்த்து மாற்றவும்: ஒவ்வொரு 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை அந்த டிஷ்யூ பேப்பரைத் தொட்டுப் பாருங்கள். அது அதிகப்படியான ஈரத்தை உறிஞ்சி நமத்துப் போயிருந்தால், அதை தூக்கி எறிந்துவிட்டு புதிய உலர்ந்த டிஷ்யூ பேப்பரை வைக்கவும்.
முக்கியக் குறிப்பு: ஃபிரிட்ஜில் துர்நாற்றத்தை நீக்க நீங்கள் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர் ரோல், முற்றிலும் புதியதாக, வாசனையற்றதாக (Unscented) இருக்க வேண்டும். கழிவறைக்கு அருகில் வைக்கப்பட்ட ரோல்களைப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல, காளான் (Mushrooms) மற்றும் தக்காளி போன்றவற்றுக்கு இந்த டிஷ்யூ பேப்பர் ட்ரிக் தேவையில்லை; அவற்றை காகித பைகளிலேயே (Paper bags) வைப்பது நல்லது.
ஒரு சிறிய டிஷ்யூ பேப்பர், உங்கள் வீட்டின் உணவு வீணாவதைத் தடுத்து, பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. இன்றே உங்கள் ஃபிரிட்ஜிலும் ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்துப் பாருங்கள், மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!
Fan Cleaning Tips : உங்க சீலிங் ஃபேன் 2 நிமிஷத்துல பளிச்சுன்னு மாறனுமா? சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ!