Hotel room safety tricks : ஹோட்டல் ரூமுக்குள் சென்றதும் இதெல்லாம் செக் பண்ணாம லைட் போடாதீங்க... !

Published : Jun 29, 2026, 11:05 AM IST

Hotel Safety : ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினால், ரூமுக்குள் சென்றபின்னர் லைட்டை உடனடியாக போடக்கூடாதாம். அதற்கு முன் சிலவற்றை பாலோ பண்ண வேண்டும். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

PREV
15
Hotel Safety Tips

சுற்றுலா செல்வோர், ஆஃபிஸ் விஷயமாக வெளியூர் செல்பவர்கள் அல்லது பிற காரணங்களுக்காக வெளியூர் செல்லும்போது பெரும்பாலானோர் ஹோட்டலில் தான் ரூம் புக் பண்ணி தங்குகின்றனர். ரூமுக்குள் நுழைந்தவுடன் இயல்பாகவே பலர் முதலில் செய்யும் விஷயம் என்னவென்றால் சுவிட்ச் எங்க இருக்குதுனு தேடி லைட் ஆன் பண்ணுவது தான். ஆனால், அது தவறு என்றும், இந்த பழக்கத்தை மாற்ற வேண்டும் எனவும் பயண பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஹோட்டல் ரூமுக்குள் நுழைந்த உடனேயே லைட் போடாமல், சில நிமிடங்கள் இருட்டிலேயே ஆய்வு மேற்கொள்வது நல்லது. இதன் மூலம் சில முக்கியமான விஷயங்களை எளிதாகக் கண்டறிய முடியும்.

25
மறைக்கப்பட்ட கேமராவை கண்டுபிடிக்கலாம்

சமீபகாலமாக சில ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகப் பல புகார்கள் வெளியாகி வருகின்றன. எனவே அறைக்குள் நுழைந்ததும் கதவு, ஜன்னல்களை பூட்டிவிட்டு, லைட் போடாமல் மொபைல் கேமராவை வைத்து அறையின் ஒவ்வொரு மூலையையும் மெதுவாக செக் பண்ணனும்

ஏனெனில் ஹிடன் கேமராக்களில் இருந்து வெளிப்படும் சிவப்பு நிற ஒளி, இருட்டான சூழலில் மொபைல் கேமராவில் சிறிய புள்ளிகளாகத் தெரியும். இதனால் சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் இருப்பதை கண்டறிவது சாத்தியமாகும். இருப்பினும், அனைத்து மறை கேமராக்களையும் இந்த முறையில் கண்டுபிடிக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

35
படுக்கையின் சுத்தத்தையும் சரிபார்க்கலாம்

அறையின் லைட் ஆன் பண்ணுவதற்கு முன், மொபைல் டார்ச் உதவியுடன் படுக்கை விரிப்பு, மெத்தை ஓரங்கள் மற்றும் தலையணைகளின் கீழ் பகுதியை ஆராயலாம். இதன் மூலம் மூட்டைப்பூச்சிகள், சிறிய பூச்சிகள் அல்லது அழுக்குக் கறைகள் உள்ளனவா என்பதை எளிதில் கவனிக்க முடியும்.

ஒருவேளை லைட் முதலில் போட்டால், சில பூச்சிகள் மெத்தையின் ஓரங்களில் மறைந்துகொள்ள வாய்ப்புள்ளதால், இருட்டில் டார்ச் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

45
அறை முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா?

ஹோட்டல் அறையின் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. சோஃபா, மேசை, கதவுக் கைப்பிடி மற்றும் குளியலறை பகுதிகளில் மொபைல் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தால் எண்ணெய் பிசுக்கு, பழைய கறைகள் அல்லது சுத்தம் செய்யப்படாத பகுதிகள் உள்ளனவா என்பதை அறியலாம்.

அறை திருப்திகரமாக இல்லையெனில், உடனடியாக ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்து வேறு அறையை வாங்க இது உதவியாக இருக்கும்

55
கண்ணாடியையும் கவனமாக பரிசோதிக்க வேண்டும்

படுக்கையறை அல்லது குளியலறையில் உள்ள கண்ணாடிகளையும் ஒரு முறை சோதித்துப் பார்ப்பது நல்லது. இருட்டான நிலையில் டார்ச் ஒளியை கண்ணாடி மீது அடிக்கும் போது அது சாதாரண கண்ணாடியாக இருந்தால் ஒளி இயல்பாக பிரதிபலிக்கும்.

ஆனால், இருவழிக் கண்ணாடி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், அதனை ஹோட்டல் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விளக்கம் கேட்பது அவசியம். இருப்பினும், டார்ச் சோதனை மட்டும் இருவழிக் கண்ணாடியை உறுதியாக நிரூபிக்கும் அறிவியல் முறை அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories