குக்கரில் படிந்திருக்கும் கறையை நீக்க கஷ்டப்படுகிறீர்களா? கெமிக்கல் எதுவும் இல்லாமல், வீட்டில் இருக்கும் இரண்டே பொருட்களை வைத்து குக்கரை புதுசு மாதிரி ஜொலிக்க வைக்கலாம். எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
சமையலறை பாத்திரங்களை பராமரிப்பது முக்கியம். குறிப்பாக, ஸ்டவ்வில் தினமும் பயன்படுத்தும் குக்கர்கள், சில சமயம் கருப்புக் கறைகளால் அதன் அழகை இழந்துவிடும். இதை சாதாரண சோப் அல்லது லிக்விட் வைத்து நீக்க முடியாது. ஆனால், ரசாயனங்கள் இல்லாமலேயே இதை சரிசெய்யலாம்.
26
தேவையான பொருட்கள் இவைதான்.!
வீட்டுல இருக்கும் இந்த பொருட்கள் உள்ள வேலையை சுலபமாக்கும். மேலும் உங்கள் வீட்டு பாத்திரங்கள் புதுசு போல மாறும். தேவையான பொருட்கள்: உப்பு, பேக்கிங் சோடா, வினிகர் (தேவைப்பட்டால் மட்டும்).
36
உடனே களத்துல இறங்குங்க.!
வீடியோவில் காட்டுவது போல, முதலில் கறை படிந்த இடத்தில் கொஞ்சம் உப்பைத் தூவவும். பிறகு, பேக்கிங் சோடாவைச் சேர்க்கவும். இப்போது, அதன் மேல் தண்ணீர் தெளித்து, ஸ்டீல் ஸ்க்ரப்பர் போன்ற சொரசொரப்பான ஸ்பான்ஜ் கொண்டு நன்றாகத் தேய்க்கவும். தேவைப்பட்டால், தண்ணீருக்குப் பதில் வினிகர் சேர்க்கலாம். வினிகர் சேர்த்ததும் நுரை பொங்கும், அதனால் கவனமாகத் தேய்க்கவும்.
இந்த முறையைப் பின்பற்றி, குக்கரில் உள்ள கருப்புக் கறையை முழுமையாக நீக்கலாம். குக்கரை மீண்டும் புத்தம் புதுசு போல ஜொலிக்க வைக்க முடியும். இதற்கு எந்த ரசாயனங்களும் தேவையில்லை, வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களே போதும்.
56
புதுசு போல பளபளக்கும் குக்கர்.!
வினிகரையும் பேக்கிங் சோடாவையும் சேர்க்கும்போது கவனமாக இருங்கள். ஏனென்றால், அவை இரண்டும் சேர்ந்து நுரையாகப் பொங்கி வரும். இந்த முறையைத் தொடர்ந்து பயன்படுத்தினால், உங்கள் குக்கர் நீண்ட காலத்திற்குப் புதுசு போலவே இருக்கும்.
66
இனி வேலையெல்லாம் சுலபம்.!
இந்த எளிய வீட்டு முறையைப் பின்பற்றி, உங்கள் சமையலறைப் பாத்திரங்களை எளிதாகப் பராமரித்து சுத்தமாக வைத்திருக்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.