Pongal 2023: பொங்கலில் சூரிய பகவானை ஏன் வழிபடுகிறார்கள்? என்னென்ன நன்மைகள் தெரியுமா?

First Published Jan 11, 2023, 11:34 AM IST

Pongal 2023: பொங்கல் விழா அன்று சூரிய பகவானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.    

தமிழர்கள் வருடம்தோறும் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடுவர். இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வேறு பெயர்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் முதல் நாளான ஜனவரி 14ஆம் தேதி, இந்திரனை வணங்கும் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 

அன்றைய தினம் குடும்பத்தினர் இணைந்து அறுவடைக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்திரனை வணங்கி காணிக்கை இடுவர். இரண்டாவது நாளில் தான் சூரிய பொங்கல் கொண்டாடப்படும். செழுமையான அறுவடையை பெற வேண்டி சூரிய பகவானுக்கு பிரசாதம் அளிப்பார்கள்.

மூன்றாவது நாளை தான் மாட்டுப் பொங்கல் என்போம். இந்த நாளில் கால்நடைகளை வணங்குவர். மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு நன்றி நவிழுவார்கள். கன்னிப் பெண்களுக்கு நன்ன்மை அருளும் காணும் பொங்கல் நான்காம் நாள் கொண்டாடப்படுகிறது. 

சூரிய பூஜை என்றால் என்ன? 

பொங்கல் விழா என்றாலே சூரிய பகவானின் வழிபாடுதான் நினைவில் வந்து நிற்கு. ஏனென்றால் எல்லா சடங்குகளும் சூரியனை வணங்குவதுடன் தொடர்பு கொண்டுள்ளன. இரண்டாவது நாளான சூரிய பொங்கல் அன்று வீடுகளுக்கு வெளியே சூரிய பூஜை செய்யப்படும். 

சூரிய கோலமிடுங்கள்! 

பூஜைக்கு தேர்வு செய்யும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும். அதில் சூரிய கோலமிட்டு பொங்கல் பானையை வைப்பர். அரிசி மாவு அல்லது சுண்ணாம்பு பொடியால் சூரிய கோலம் வரையப்படுகிறது. சிலர் மயில், கரும்பு, பொங்கி வழியும் பொங்கல் போன்றவையும் வரைந்து அசத்துவார்கள். 

இதையும் படிங்க; Pongal rangoli designs 2023: பொங்கலுக்கு இந்த ரங்கோலி கோலங்களை போடுங்க! பாக்குறவங்க அசந்து போய்டுவாங்க!

சூரிய பகவானுக்கு படையல்! 

சூரிய பூஜையில் உணவு முக்கிய இடம் பிடிக்கிறது. வீட்டு முற்றத்தில் அல்லது பக்கவாட்டில் அடுப்பு அமைத்து குடும்பமாக பொங்கல் செய்வார்கள். அப்போது மூன்று கரும்புகளை இணைத்து கட்டி ஒரு விதானம் போல செய்யப்படுகிறது. பொங்கல் பானையில் மஞ்சள் செடியைக் கட்டி வைத்து பொங்கல் சமைப்பர். மங்களம் மற்றும் செழுப்பின் அடையாளமாக இது கருதப்படுகிறது. 

மந்திரங்கள் 

சூரிய பகவானை வழிபடும்போது சூரிய அஷ்டோத்திரம் அல்லது காயத்ரி மந்திரம் சொல்லப்படுகிறது. இதன் மூலம் சூரிய பகவானுக்கு நன்றி கூறுவதுடன், அவரின் ஆசியையும் பெறலாம். வழிபாடு நிறைவடைந்ததும் தீர்த்தம், பூக்கள் ஆகியவை பொங்கலின் மீது தெளிக்கப்பட்டு பரிமாறப்படும். 

இதையும் படிங்க; Facts about Jallikattu: சிந்து சமவெளி நாகரிகத்தை முந்திய ஜல்லிக்கட்டு! வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்

வித்தியாசமான வழிபாடு

தென்னிந்தியாவில் உள்ள சில இடங்களில், பாத்திரத்தில் தண்ணீர் உற்றி அதில் சூரியனின் பிரதிபலிப்பை காண்பதை மரபாக வைத்திருக்கிறார்கள். சில சமூகத்தினர் நீரில் குங்குமம், மஞ்சள் கலந்து சூரிய பிரதிபலிப்பை கண்டு வழிபடுகிறார்கள். எல்லா வளமும் பெற்று வாழ பொங்கலில் சூரிய பகவானின் அனுக்கிரகம் தேவை நம்பப்படுகிறது. பொங்கல் அன்று காலையில் அவரை வணங்கி ஆசி பெறுங்கள். 

இதையும் படிங்க; Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

click me!