அழகியலில் முதன்மை பங்கு வகிக்கும் அரிசி கோலம், ஜீவகாருண்யத்தின் பிரதிபலிப்பு. இது மகிழ்ச்சியும் செழிப்பையும் குறிக்கிறது. வீடுகளின் மீது வரையப்படும் கோலம், பிரகாசமான காவி நிறம் ஆகியவை தீய மற்றும் விரும்பத்தகாத சக்திகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.
பொங்கல் நாளில், குடும்ப உறுப்பினர்கள் இணைந்து அரிசி மாவைக் கொண்டு கோலம் வரைவார்கள். ஒரு உருளைக் கம்பியை வழிகாட்டியாகப் பயன்படுத்தி இணையான நேர்கோடுகளை வரையலாம். புள்ளிக் கோலம், ரங்கோலி என்று பல பரிணாமங்களில் கோலம் வந்துவிட்டது.
இதையும் படிங்க; Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!