Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!

First Published Jan 10, 2023, 1:28 PM IST

Pongal 2023: அறுவடை திருநாளான பொங்கல் அன்று வழிபட வேண்டிய நேரம், காலம் ஆகியவை குறித்த முழுதகவல்களை இங்கு காணலாம்.

தைப்பொங்கல் தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்படும் விழாவாகும். ஆடியில் விதைத்ததை தையில் அறுவடை செய்து அந்த அரிசியுடன், சர்க்கரை பால் கலந்து புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைப்பதையே அறுவடைத் திருநாள் என்பர். புத்தாடை உடுத்தி மங்களம் பொங்க உள்ளம் மகிழும் அந்த நாளில் வீடுகள் களைகட்டும்.

பொங்கல் செய்யும்போது லக்னங்களை கவனிக்க வேண்டியது அவசியம். எப்போதும் மகர, கும்ப லக்னங்களில் தான் பொங்கல் விட வேண்டும். இந்த நேரம் என்பது காலை 6 மணி முதல் 10 மணிக்குள் இருக்கலாம். ஆனால் இந்த இடைப்பட்ட நேரத்தில் ராகு, எமகண்டம் கூட இருக்க வாய்ப்புள்ளது. அதையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
 

இந்தாண்டு பொங்கல் விழாவானது ஜனவரி 14ஆம் தேதி சனிக்கிழமை போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. எப்போதும் ஜனவரி 14ஆம் தேதி தான் பொங்கல் பண்டிகை தொடங்கும். ஆனால் இந்தமுறை ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் விழா தொடங்குகிறது.

தேதியும் காலமும்!

போகி பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி
சூரிய பொங்கல் ஜனவரி 15ஆம் தேதி
மாட்டுப் பொங்கல் ஜனவரி 16ஆம் தேதி
காணும் பொங்கல் ஜனவரி 17ஆம் தேதி

சூரிய பொங்கல் வைக்க ஏற்ற நேரம்

ஜனவரி 15ஆம் தேதி (தை முதல் நாள்) அன்று சூரிய பொங்கல் வைக்க ஏற்ற நல்ல நேரம் காலை 7.30 முதல் 8.30 வரை ஆகும். பகலில் பொங்கலிட விரும்புவோர் 1.30 முதல் 2.30 வரையான நேரத்தை பயன்படுத்தலாம்.மாலையில் 3.30 முதல் 4.30 வரையில் பொங்கலிடலாம். 

இதையும் படிங்க; பொங்கல் பண்டிகையில் நற்பலன் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானம் செய்யணும் தெரியுமா?

மாட்டுப் பொங்கல் வைக்க ஏற்ற நேரம்

ஜனவரி 16ஆம் தேதி (தை இரண்டாம் நாள்) மாட்டுப் பொங்கல் வைக்க விரும்புவோர் காலை 6.30 முதல் 7.30 வரையான நேரத்தில் பொங்கல் வைக்கலாம். மாலை நேரத்தில்  4.30 முதல் 5.30 மணி வரை உகந்த நேரம்.

தைப்பொங்கல் கொண்டாட்டம் முழுக்கவே விவசாயத்தை கொண்டாடும் விழாதான். வேளாண்மைக்கு உதவியாக உள்ள இந்திர பகவான், சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி வழிபடுவதோடு, விவசாயத்திற்கு உதவும் கருவிகளையும் வணங்குவர். கிராமங்களில்  அதிகாலையில் எழுந்து சூரியபகவானை வணங்கி, குடும்பமாக இணைந்து பொங்கலிட்டு மகிழ்வர். இந்த தைப் பொங்கல் உங்கள் வாழ்வில் செழுமையையும், இனிமையும் கொண்டு வரட்டும். 

இதையும் படிங்க; Bhogi pongal 2023: தீமைகள் விலக்கும் போகி பண்டிகை வரலாறு என்ன?  இந்திரனை வணங்கும் பின்னணி இதோ! 

click me!