சீக்கிரம் கேஸ் தீர்ந்து போகிறதா? இந்த காரணமா இருக்கலாம் செக் பண்ணுங்க!

First Published | Jan 9, 2023, 10:11 AM IST

ஸ்டவ்வில் உள்ள பர்னரை முறையாக சுத்தம் செய்தாலே சமைக்கும்போது நேரமும், கேஸும் மிச்சமாகும். 

நம் வீட்டில் உள்ள சாதனங்களில் முக்கியமானதாக கேஸ் அடுப்பு உள்ளது. இதுவே உணவு சமைக்க அத்தியாவசியமாக பார்க்கப்படுகிறது. சில வீடுகளில் மின்சார அடுப்பு இருந்தாலும், கேஸ் அடுப்பு தான் முதன்மை பயன்பாட்டில் இருந்துவருகிறது. இந்த அடுப்பை சுத்தமாக வைத்து கொள்வது முக்கியம். இந்த அடுப்பை சுத்தம் செய்யும் போது ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே சுத்தம் செய்ய வேண்டும். அதில் பர்னர் சுத்தம் செய்வது எப்படி என்பதை இங்கு காணலாம். 
 

பர்னரில் வெளிப்படும் தீ பிளம்பு நீல நிறமாக இல்லாமல் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக இருந்தால், பர்னர் அசுத்தமாக உள்ளது என்றே அர்த்தம். இதனால் உணவு சமைக்கவும் நீண்ட நேரம் எடுத்து கொள்ளும். பர்னர் துளைகளுக்குள் அழுக்கு, தூசி போன்றவை அடைத்து காணப்பட்டால் அவற்றை நீக்குவது அவசியம். அப்படி செய்யாமல் போனால் கேஸ் வீணாகும் அபாயமும் உள்ளது. 

Tap to resize

டிப்ஸ் 1 

எலுமிச்சை சாறுடன் பேக்கிங் சோடா கலந்து அசுத்தமான பர்னரை தேய்த்து சுத்தம் செய்யுங்கள். நன்கு பிரஷ் கொண்டு தேய்த்த பிறகு சூடான நீரில் பர்னரை போட்டு ஊற வையுங்கள். அதன் பின்பும் பிரஷ் வைத்து பர்னரை தேய்த்தால் பளபளவென மின்னும். 

இதையும் படிங்க; Pongal Recipes 2023: பொங்கல் பண்டிகைக்கு இந்த ரெண்டு ஸ்வீட்டையும் செஞ்சு அசத்திடுங்க!

டிப்ஸ் 2 

வினிகர் அல்லது எலுமிச்சை கலந்த வெந்நீரில் பர்னரை சில மணி நேரம் ஊற வையுங்கள். அதன் பிறகு பர்னரை எடுத்து தேய்த்து சுத்தம் செய்யுங்கள். ஓட்டையில் சிக்கியுள்ள கடினமான அழுக்குகளை ஊக்கு அல்லது ஊசி கொண்டு நீக்கி கொள்ளுங்கள். பின்னர் பர்னரை கழுவி உலர வையுங்கள். 

டிப்ஸ் 3 

டிஸ்வாஷ் லிக்விடு, உப்பு ஆகியவை கலந்தும் பர்னரை தேய்க்க வேண்டும். அதன் பிறகு சூடான நீரில் கழுவி சுத்தம் செய்யலாம். இந்த மூன்று குறிப்புகளும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். முறையாக பர்னரை சுத்தம் செய்தாலே சமைக்கும்போது நேரமும், கேஸும் மிச்சமாகும். 

இதையும் படிங்க; ஒரு சில நிமிடங்களில் டாய்லெட் பளீச்னு வாசனையா மாறணுமா? வெறும் டூத் பேஸ்ட் மட்டும் போதும்!

Latest Videos

click me!