
முதல்முதலாக சீனாவில் (6000 பிசி) உப்பை உற்பத்தி செய்ததாக வரலாறு கூறுகிறது. தமிழகத்தை பொருத்தவரை உப்பிற்கும், மன்னர்களின் ஆட்சிக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. சங்க காலத்தில் உப்பு விற்பவர்களை உமணர்கள் என சொல்வர். இவர்கள் ஊர் ஊராக சென்று உப்பை விற்பதுடன் ஒவ்வொரு ஊருக்கும் இடையில் தகவல்களை பரிமாறுபவர்களாகவும் இருப்பர். பொன் எடுப்பது, கொடுப்பது, ஆட்சிக்கு இடையூறாக இருக்கும் விஷயங்கள் குறித்து உளவாளிகள் போல கவனித்து சொல்வது என உப்பு விற்பவர்கள் தான் தகவல்களை சொல்வர்.
சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்கு கீழேயே உப்புத்தொழிலை வைத்திருந்தனர். உப்பளங்களின் பெயர்களாக அரசர்களின் பட்டப் பெயர்களையே சூட்டியிருந்ததும் அதற்கு சான்று. அறிவியல்படி உப்பு கிருமிநாசினியாக செயல்படுகிறது. மதத்திற்கும் உப்பிற்கும் கூட தொடர்பு உள்ளது. தீய சக்திகளை விரட்டும் எல்லா சடங்குகளிலும் உப்பு முக்கிய இடம் வகிக்கிறது. எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ருமானியர்கள், ஜப்பானியர்கள் உப்பை கடவுளுக்கு படைத்தனர். உப்பு என்ற சொல்லுக்கு சுவை என்பது பொருள். மற்ற சுவைகளுக்கு இனிப்பு, துவர்ப்பு என பெயர் வந்தது கூட உப்பு என்ற சொல் அடிப்படையில்தான்.
இதையும் படிங்க; கன்னித்தன்மையை இழந்த பெண்களுக்கும் முதலிரவில் ரத்தம் வரும்! இந்த மாத்திரையை பத்தி தெரியுமா?
ஜப்பானியர்கள் தங்களுடைய உணவகங்களுக்கு வெளியே உப்பை வைத்திருப்பார்கள். கடலுக்கு நன்றி கூறுதல், மண்ணை தூய்மையாக வைப்பதை நினைவூட்ட உப்பை வெளியில் வைப்பதாக தெரிவிக்கின்றனர். நம் ஊர்களில்கூட பண்டைய காலத்தில் உப்பின் தேவையை மனதில் கொண்டு கடைகளுக்கு வெளியில் வைப்பர். இரவில் கடையை மூடினாலும் தேவைப்படுபவர்கள் வந்து எடுத்து கொள்ளலாம். ஆனால் இரவில் இரவல் கொடுப்பது துரதிஷ்டம் என மக்கள் கருத தொடங்கிய பின்னர் இந்த பழக்கம் குறைய தொடங்கியுள்ளது. கிராமத்தில் உள்ள சில கடைகளில் இப்போதும் உப்பு மூட்டை வெளியில் தான் இருக்கும். அதற்கு காரணம் இதுதான்.
வேடிக்கையான உண்மை என்னவெனில் புத்த மதத்தில் இறந்த வீட்டுக்கு சென்று திரும்பும்போது உப்பை அள்ளி தலையை சுத்திவிட்டு எறிவார்களாம். இறந்தபோனவர் உடலில் இருந்த ஆவி வெளியேறி அவர்களுடைய முதுகில் ஏறி கூடவே வந்துவிடும் எனவும், அதை தடுக்க உப்பை சுற்றி எறிவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
வேள்பாரி புத்தகத்தில் மூவேந்தர்களும் பாரியின் மீது படையெடுக்க காரணம், பாரி குடியிருந்த மலையில் இருந்த வளங்கள் தான். அந்த வளங்களையும், பாரியின் புகழையும் அழிப்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கும்.அது போல தான் வரலாறு முழுக்க வளங்களை அபகரிக்க போர் மூண்டு கொண்டே இருந்தது. அப்படிதான் கிறிஸ்து பிறப்புக்கு முன்பு உப்பு யாரிடம் அதிகம் இருந்ததோ அவர்கள் தான் செல்வந்தர்களாக கருதப்பட்டனர். உப்பிற்காக சீனாவில் போர் மூண்டுள்ளது. ஷாங்க்ஷி எனும் மாகாணத்தில் இருந்த உப்பு ஏரியில் படிந்திருந்த உப்பை மக்கள் சேகரித்து வாழ்ந்துவந்தார்கள். அதனை தங்கள் வசப்படுத்த தான் அரசர்கள் போர் செய்துள்ளார்கள். உப்பு இந்த காலத்தில் விலை குறைச்சலாக கிடைத்தாலும் அப்போது அதற்கு கிராக்கி அதிகமாகவே இருந்தது. போருக்கும் அதுவே காரணமாக இருந்திருக்கலாம்.
இதையும் படிங்க; ஒரு சில நிமிடங்களில் டாய்லெட் பளீச்னு வாசனையா மாறணுமா? வெறும் டூத் பேஸ்ட் மட்டும் போதும்!