வீட்டு சுத்தத்தில் மிக முக்கியமானது கழிவறை சுத்தம். கழிவறையை சுத்தம் செய்ய சில தயங்குவார்கள். யாராவது சுத்தம் செய்து வைத்தால் போதும் என பின் வாங்குவார்கள். இதற்கு கழிவறையின் துர்நாற்றமும், அருவருப்பு தரக்கூடிய நிறமாற்றமும் தான் காரணம்.
கழிவறையை சுத்தம் செய்யாமல் நாம் பின் வாங்குவது போல கிருமிகள் பின்வாங்குவதில்லை. அதனால் அவசியம் கழிவறையை சுத்தம் செய்தாக வேண்டும். அருவருப்பு இல்லாமல் கழிவறையை சுத்தம் செய்வது குறித்து இங்கு காணலாம்.
இந்த க்ளீனிங் முறையில் நமக்கு வேண்டியதெல்லாம் ஒரு டூத் பேஸ்ட்தான். அது எவ்வளவு மதிப்பு, என்ன பிராண்ட், என்ன ப்ளேவர் எதுவும் அவசியமில்லை. நமக்கு தேவை ஒரு டூத் பேஸ்ட் அவ்வளவுதான். இந்த டூத் பேஸ்டின் சிறு சிறு துளைகளாக நிறைய துளையிட்டு கொள்ளுங்கள். அதனை கழிப்பறை தொட்டியில் போட்டுவிடுங்கள்.
நீங்கள் இதன் பின்னர் கழிவறையை பயன்படுத்திவிட்டு ப்ளஷ் செய்யும்போது கொஞ்சம் கொஞ்சமாக டூத்பேஸ்ட் வெளியேறும். இதனால் கழிவறை சுத்தமாகவும், வாசனையாகவும் மாறும். இந்த டூத் பேஸ்ட் ஒரு மாதம் வரையிலும் குறைந்தப்பட்சம் பலன் அளிக்கும்.