Home care: எதிர்காலத்துல பிரச்சனை இல்லாம இருக்கணும்னா வீடு கட்டும் போது இதை கவனிக்கணும்!

First Published Jan 5, 2023, 2:44 PM IST

நாம் வசிக்கும் வீடு வெறும் நான்கு சுவர்களால் ஆன அறையை கொண்டதாக மட்டுமில்லாமல் சில அத்தியாவசிய வசதிகளை கொண்டிருக்க வேண்டும். 

உலகின் எல்லா மூலைகளுக்கும் பறவையாய் பறந்தாலும் நாம் திரும்பி வர வீடு என்ற ஒன்றிருக்க வேண்டும். பறவைக்கும் கூடடைதல் உண்டல்லவா? சுற்றுலா செல்லும்போது எத்தனையோ வசதியான ஹோட்டல்களில் தங்கினாலும் எப்போது வீட்டிற்கு வந்து சேர்வோம் என்று நினைக்காதவர்கள் வெகு சிலரே. வீடு நம் உணர்வுகளோடு கலந்தது. 

சிலருக்கு சொந்த வீடு கட்டுவதே கனவாக இருக்கும். தனக்கென ஒரு வீடு, அறை என்பது பலருக்கும் நெடுநாள் கனவாக இருக்கும். அப்படி கனவு இல்லத்தை கட்டும் போது பார்த்து பார்த்து கட்டுவார்கள். சிலர் வீடு அழகாய் இருப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வீட்டில் உள்ள வசதிகளை சரியாக செய்வதில் கொடுப்பதில்லை. வீட்டை ஒரு முறை கட்டிய பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகுதான் மறுசீரமைப்பு செய்கிறோம். விலைவாசி இருக்கும் நிலைமைக்கு ஒருமுறை கட்டுவதோடு போதும்டா சாமி! என்றாகிவிடுகிறது. அப்படிகட்டும் வீட்டில் முக்கியமாக செய்ய வேண்டிய வசதி குறித்து இங்கு காணலாம். 

ஒருவர் 3 படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றினை கட்டுகிறார். அதில் தன்னுடைய குழந்தை வசதியுடன் வாழ வேண்டும் என ஒதுக்கிய அறையில் மட்டும் கழிவறை வசதி செய்துவிட்டு மற்ற இரண்டு படுக்கையறைக்கும் பொதுவாக ஒரு கழிவறையை வைத்துவிட்டார். இப்போது அவரது தியாகம் நமக்கு புல்லரிப்பை ஏற்படுத்தலாம். தன்னுடைய குழந்தைக்கு வசதியை செய்து கொடுத்த பெற்றோர் அல்லவா அவர்கள். ஆனால் அங்கு தான் சிக்கல். படுக்கயறையுடன் கழிவறையை வைக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். 

இதையும் படிங்க; வீட்டில் என்றும் குறையாத செல்வம் பெருகனுமா? பெண்கள் இந்த குளியலை பின்பற்றினாலே போதுமாம்!

வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு வசதியை ஏற்படுத்தி கொடுப்பதில் தவறில்லை. ஆனால் பெற்றோர் தங்கள் மீதும் கவனம் வைக்க வேண்டும். அவர்களுக்கு வயதாகும்போது மற்றவர்கள் துணையில்லாமல் இயங்குவது சிரமமாக இருக்கும். அவர்களுக்கு படுக்கறையுடன் கழிவறையை அமைப்பது எதிர்காலத்தில் உதவியாக இருக்கும். நோயுற்ற சமயத்தில் வெகுதூரம் சென்று கழிவறை பயன்படுத்துவதை விட படுக்கையறையில் இருப்பதுதான் வசதியானது. 

லட்சங்களை செலவு செய்து வீடு கட்டும்போது என்னென்ன வசதிகள் அத்தியாவசியம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். போதிய இடவசதி இல்லை என்ற காரணமென்றால் குழந்தைக்கும், உங்களுக்கும் அமைக்கும் கழிவறையை இடத்தில் சம பங்கீட்டு பயன்படுத்துங்கள். செலவோடு செலவாக திட்டமிட்டு வீட்டை கட்டினால் எதிர்காலத்தில் சிக்கல் இருக்காது. வீட்டின் அனைத்து அறைகளையும் விட கழிவறை முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க; உங்க வாழ்க்கைத் துணையோட உடலுறவு வெச்சிக்க முடியலயா? அப்படினா இந்த விஷயம் உங்களுக்கு ரொம்ப முக்கியம்!

click me!