Avoid Food: கர்ப்பகாலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடாதீங்க...மீறினால் என்ன ஆபத்து தெரியுமா..?

First Published Aug 4, 2022, 6:10 AM IST

Avoid Food: கர்ப்ப காலத்தில்  உணவில் நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, எந்தெந்த உணவுகள் உடலுக்கு நல்லது என்பதை இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம். 

Avoid Food

பெண்கள் கர்ப்பக காலத்தில் அதிக  கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்வில் சிறந்த தருணம் அவள் தாயாக மாறுவதுதான். எனவே, இந்த நேரத்தில் அவர்கள் செய்யும் எந்த ஒரு தவறு குழந்தையை பாதிக்ககூடாது என்பதில் மிகுந்த கவனம் தேவை. பழங்கள், காய்கறிகள் எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சிறந்த உணவு என்றாலும், கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான உணவுப் பொருள்கள் இருக்கின்றன.  எனவே, என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

 மேலும் படிக்க ....Garlic: அதிக அளவிலான பூண்டு உடல் நலத்திற்கு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்...மிஸ் பண்ணாம தெரிந்து கொள்ளுங்கள்

Avoid Food

தேநீர் மற்றும் காபி: 

தேநீர், காபிபோன்ற பானங்களில் இருக்கும் கஃபைன் சேர்க்கை, கருவை பாதிக்கக்கூடும். எனவே, கர்ப்ப காலத்தில், பெண்கள் அதிகமாக டீ அல்லது காபி அல்லது காஃபின் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
 

முட்டை: 

கர்ப்ப காலத்தில் பெண்கள் முட்டைகளை சாப்பிட வேண்டாம். ஏனெனில், இதில் இருக்கும் சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக, பெண்களுக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படுகிறது.

இறைச்சி: 

கர்ப்ப காலத்தில் பெண்கள் இறைச்சியை அதிகமாக உட்கொள்வது அவர்கள் உடல் நலத்தை பாதிக்கும். எனவே, அசைவ உணவுகளை வாங்குவதில் தொடங்கி, சமைப்பது வரை ஒவ்வொரு விஷயமுமே கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 மேலும் படிக்க ....Garlic: அதிக அளவிலான பூண்டு உடல் நலத்திற்கு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்...மிஸ் பண்ணாம தெரிந்து கொள்ளுங்கள்

Avoid Food

மெர்குரி மீன்: 

கர்ப்ப காலத்தில் பெண்கள் மெர்குரி மீனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது கர்ப்பிணிப் பெண்ணின் உடலுக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும். மெர்குரி மீன் ஒரு பெண்ணின் நரம்பு மண்டலம், நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் சிறுநீரகங்களை பாதிக்கலாம்.

சீஸ் உணவு பொருட்கள்:

கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின்  வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.

Avoid Food


பேரிச்சை பழம்:

பேரிச்சை பழத்தில் அதிக அளவிலான இயற்கை சர்க்கரை நிரம்பியுள்ளது. கர்ப்ப கால சிக்கலை தவிர்க்க, நீங்கள் இதை கட்டாயம் இதை தவிர்க்க வேண்டும்.

பப்பாளி: 

கர்ப்பிணிப் பெண்களுக்கு பப்பாளி சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. பச்சை மற்றும் பழுக்காத பப்பாளியில் லேடெக்ஸ் உள்ளது. இது  கருக்கலைப்பு மற்றும் கருப்பைச் சுருக்கத்தை ஏற்படுத்தும்.

 மேலும் படிக்க ....Garlic: அதிக அளவிலான பூண்டு உடல் நலத்திற்கு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்...மிஸ் பண்ணாம தெரிந்து கொள்ளுங்கள்

click me!