Garlic: அதிக அளவிலான பூண்டு உடல் நலத்திற்கு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்...மிஸ் பண்ணாம தெரிந்து கொள்ளுங்கள்

First Published Aug 3, 2022, 2:26 PM IST

Side effects of eating garlic: பூண்டின் அதிகப்படியான பயன்பாடு பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அப்படி என்றால் ஒரு நாளைக்கு எவ்வளவு பூண்டு உட்கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

Kitchen

நம்முடைய சமையல் அறையில் இடம்பெற்றிருக்கும் பொருட்களின் பூண்டிற்கு தனி இடம் உண்டு. பூண்டில்  அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டு சாப்பிடுவதால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதற்கான ஆபத்து பெருமளவு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றனர்.

Kitchen

அதிலும் குறிப்பாக, ஆண்களுக்கு பூண்டு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஏனெனில், சிறந்த உணவான பூண்டு ஆண்களுக்கு ஏற்படும் பல உடல்நல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. எனவே, பூண்டு உடலை ஆரோக்கியமாக்குகிறது. ஆனால், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதை மறந்து விடக்கூடாது. ஆம், நாம் அளவிற்கு அதிகமாக  பூண்டு எடுத்துக் கொள்வது, உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால அளவோடு தான் பூண்டை உட்கொள் வேண்டும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

 மேலும் படிக்க....Aadi 18: ஆடி பெருக்கில் சூரியனிடமிருந்து ஜாக்பாட் பலன்...இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்..

Kitchen

சருமத்திற்கு பாதிப்பு:

அதிகப்படியான பூண்டு சாப்பிடுவதால், உடலில் பல விதமான பக்க விளைவுகள் ஏற்படலாம். அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகலாம். பூண்டில் உள்ள அல்லிநேஸ் என்னும் என்சைம், சருமத்தில் தடிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.

 மேலும் படிக்க....Aadi 18: ஆடி பெருக்கில் சூரியனிடமிருந்து ஜாக்பாட் பலன்...இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்..

தலைவலி:

பூண்டை பச்சையாக உட்கொள்வது தலைவலியைஉண்டாக்கும். பச்சை பூண்டை சாப்பிடுவதால், மூளையில் உள்ள முக்கோண நரம்பு தூண்டப்பட்டு, மூளைக்கு வலிக்கான சிக்னலை அனுப்பும் ந்யுரோபெப்டிடு அளவை அதிகரிக்கிறது. இது மூளையை  மூடியிருக்கும் தோல் பகுதியை அடைந்து தலைவலியை உண்டாக்குகிறது.
 

Kitchen

இரத்தப் போக்கு பிரச்சனை:  

பூண்டு இரத்தத்தை நீர்க்க செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் பூண்டை அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு இரத்தப் போக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். அறுவை சிகிச்சை, காயம் இருந்தால் இந்த பிரச்சனை மிகவும் ஆபத்தானது. எனவே, இரத்தப்போக்கு கோளாறு உடையவர்கள் அல்லது இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் பூண்டு அதிக அளவு சாப்பிடுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.

Kitchen

கல்லீரல் பாதிப்பு:

பூண்டில் அல்லிசின் கலவை அதிகம் இருப்பதால், அதிகமாக உட்கொண்டால் கல்லீரலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். இது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

வாய் துர்நாற்றம்:

 பூண்டின் அதிகப்படியான பயன்பாடு  வாய் துர்நாற்றம், வாய்வு தொல்லை மற்றும் வயிற்று வலி போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில், பூண்டு அதிகமாக உட்கொள்வது குமட்டல், நெஞ்செரிச்சல், வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.  

 மேலும் படிக்க....Aadi 18: ஆடி பெருக்கில் சூரியனிடமிருந்து ஜாக்பாட் பலன்...இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்..

எனவே, காலையில் வெறும் வயிற்றில் தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடலாம் அதற்கு மேல் சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகள் தோன்றும். ஒரு வேளை அப்படி ஏதேனும் இருப்பினும் அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிக்சை பெறுவது அவசியம். 
 

click me!