Baby Food: பெற்றோர்கள் கவனத்திற்கு... 6 மாத குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு நிகரான சத்து கொண்ட உணவுகள்...

First Published Aug 3, 2022, 3:45 PM IST

6 Month Baby Food: உலக தாய்ப்பால் வாரத்தின் (ஆகஸ்ட் 1-7) சிறப்பாக 6 மாத குழந்தைக்கு என்னென்னெ உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது என்றால் அது மிகையல்ல. தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து போன்றவை கிடைப்பதுடன் முக்கியமாக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது.

baby food

இருப்பினும், கிட்டத்தட்ட 3 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு குறைந்தப்பட்சம் 6 மாதங்கள் கூட தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, 6 மாத குழந்தைக்கு தாய் பால் அவசியம்.  உங்கள் குழந்தை 6 வது மாதத்தை நிறைவு செய்யும் போது பெரும்பாலான உணவு வகைகள் குழந்தைக்கு அறிமுகமாகியிருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பல்வேறு புதுவித உணவுகளை கொடுக்க வேண்டியது கட்டாயம். எனவே, 6 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேலும் படிக்க...Garlic: அதிக அளவிலான பூண்டு உடல் நலத்திற்கு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்...மிஸ் பண்ணாம தெரிந்து கொள்ளுங்கள்

மசித்த வாழைப்பழம் : 

பாதி வாழைப்பழத்தை எடுத்து கொண்டு தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி சேர்த்து மசித்து கொள்ளவும். ப்யூரி போன்ற பதம் வரும்வரை கலக்கவும். இந்த மசித்த வாழைப்பழ ப்யூரியை குழந்தைக்கு தந்து வரலாம்.

மேலும் படிக்க...Garlic: அதிக அளவிலான பூண்டு உடல் நலத்திற்கு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்...மிஸ் பண்ணாம தெரிந்து கொள்ளுங்கள்

செரலாக்:

செரலாக் தினமும் ஒரு வேளை கொடுக்கலாம். படிப்படியாக இரண்டு வேளையும் சேர்க்கலாம். இதையே குழந்தைக்கான திட உணவு கொடுக்கும் போது வேக வைத்தும் கொடுக்கலாம். புரதம் நிறைந்த இந்த ஹோம்மேட் செர்லாக் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளையும் கொண்டிருக்கிறது என்பதை குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் அறிய முடியும்.

கேரட்:

நீங்கள் காய்கறிகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். அதில் கேரட் குழந்தைக்கு ஏற்ற உணவு. கேரட்டை வேக வைத்து மசித்தோ அல்லது ஜூஸாகவோ ஒரு டேபிள் ஸ்பூன் என ஒருவேளை தரலாம். ஒரு நாளைக்கு வேகவைத்து மசித்த கேரட் அல்லது ஜூஸை 2 டேபிள் ஸ்பூன் வீதம் 2 முறை தரவும்.

ஸ்ட்ராபெர்ரி ப்யூரி : 

இதற்கு முதலில்  ஸ்ட்ராபெர்ரி பழங்களை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு இந்த ஸ்ட்ராபெர்ரிகளை  5 நிமிடங்கள் வேக வைக்கவும். வேக வைத்த பழங்களுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மசித்து கொண்டு, குழந்தைகளுக்கு பரிமாறலாம். இதை அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க...Garlic: அதிக அளவிலான பூண்டு உடல் நலத்திற்கு ஆபத்தா? வெளியான அதிர்ச்சி தகவல்...மிஸ் பண்ணாம தெரிந்து கொள்ளுங்கள்

இருப்பினும், இந்த உணவு வகைகள் எல்லாம் உங்கள் குழந்தைக்கு ஒத்துக் கொள்கிறதா? என்பதை முதலில் பரிசோதிக்க கொடுக்க வேண்டும். ஒருவேளை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் குழந்தையை கட்டாய படுத்தக் கூடாது.

click me!