planets -sukran peyarchi 2022
ஜோதிடத்தின் பார்வையில், இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தில் நிகழும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் முதலாவதாக (ஆகஸ்ட் 9ம் தேதி) அதாவது ஆடி 24ம் தேதி முதல் கிரக மாற்றம் நிகழும். இந்த நாளில் புதன் கடகத்தை விட்டு சிம்ம ராசியில் பிரவேசிப்பார். இதையடுத்து, (ஆகஸ்ட் 11ம் தேதி) அதாவது ஆடி 26ம் தேதி இரண்டாவது ராசி மாற்றம் நடக்கும். அன்று ஆடம்பர வாழ்க்கையின் காரணியாக சுக்கிரன் சிம்ம ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைகிறார். பொதுவாக கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தில் நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க..Suriyan Peyarchi 2022: சந்திரனின் வீட்டிற்குள் நுழையும் சூரியன்...இந்த மூன்று ராசிகளுக்கு கெடு பலன் உண்டாகும்
planets
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் நிகழும் சுக்கிரனின் கிரகப் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். இந்த வேளையில், உங்களது பணி பாராட்டப்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணி புரியும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள்.