மேட்டூர் அணையினால் விவசாயம் செழிப்பு:
மேட்டூர் அணையினால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நீர் பாசன வசதி பெறுகின்றது. விவசாயத்தின் மூலம் நெல் , கரும்பு ,கோதுமை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்கின்றனர். இதனால் விவசாயம் செழித்து காணப்படுகிறது.
மீனவர்களுக்கு இந்த அணையின் நடுவே உள்ள நீர்பிடிப்பு பகுதியில் மீன்கள் பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேட்டூர் அணையின் அதிகபட்ச உயரம் 214 அடி கொண்டது. இதன் நீர் தேக்கஅளவு 120 அடி உயரமாகும். அணையின் நீளம் 1700 மீ ஆகும். 171அடி அகலம் கொண்டது. அணையின் மொத்த கொள்ளவு 93.4 பில்லியன் கன அடி (2.64 கி மீ3) ஆகும்.