தமிழ் மாதங்களில் மிகவும், புண்ணியமான மாதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஆடி இந்த ஆண்டு, ஜூலை 17 ஆம் தேதி, ஞாயிறு அன்று ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி பிறந்தாலே நம்முடைய ஊர்களில் விழாக்கள் களை கட்டும். அம்மன் கோவில் திருவிழாக்கள் முதல் ஆபர்கள் வரை எங்கு பார்த்தாலும், கூட்டம் எகிறும். ஆடி முதல் நாளை ஆதி பண்டிகை என்று கொண்டாடுவார்கள். அதன் பின்னர், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை எல்லாம் முக்கிய நாட்கள். இந்த மாதத்தில் முன்னோர்களின் வழிபாடு நற்பலன்களை தரும் என்பது நம்பிக்கை.