Ginger Chutney: பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி சட்னி சாப்பிடும் போது வயிற்றில் ஏற்படும் அஜீரண கோளாறு, வாயு பிரச்சனையை சரி செய்கிறது. எனவே, இந்த பதிவின் மூலம் இஞ்சி சட்னியை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே நமக்கு உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். சளி, இருமல், அஜீரண கோளாறு, வயிற்று வலி, போன்றவை பாடாய் படுத்தும். எனவே, இவற்றை சரி செய்வதற்கு இஞ்சி மிக சிறந்த உணவு பொருட்களில் ஒன்றாகும். பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி சட்னி சாப்பிடும் போது வயிற்றில் ஏற்படும் அஜீரண கோளாறு, வாயு பிரச்சனையை சரி செய்கிறது. எனவே, இந்த பதிவின் மூலம் இஞ்சி மற்றும் புதினா சட்னியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முதலில் புளியை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து, பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும் பின்னர் அதனை ஒரு தட்டில் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் கடலை பருப்பு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
44
Ginger Chutney
பிறகு வதக்கிய இஞ்சி கடலைப்பருப்பு வரமிளகாய் கருவேப்பிலை ஆகிய மூன்றையும் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். சிறிய பாத்திரத்தில் கடுகு கருவேப்பிலை தாளித்து அதனை சட்னியுடன் சேர்க்கவும். இப்போது சுவையான இஞ்சி சட்னி தயாராகிவிட்டது. இவற்றை நீங்கள் இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.