உங்கள் வீட்டில் உள்ள திரவ உணவுகளை நீண்ட நாள் சேமிக்க சிறந்த வழிகள் இதோ...!!!

Published : Jun 05, 2023, 06:52 PM ISTUpdated : Jun 05, 2023, 07:17 PM IST

உங்கள் வீட்டின் சமையலறையில் பல திரவ பொருட்கள் உள்ளன. அவை நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கவும், அவற்றை சேமிப்பதற்கான வழிகளும் இங்கு பார்க்கலாம்.

PREV
17
உங்கள் வீட்டில் உள்ள திரவ உணவுகளை நீண்ட நாள் சேமிக்க சிறந்த வழிகள் இதோ...!!!

எதையாவது முறையாகப் பராமரித்தல் மற்றும் பயன்படுத்துவது பற்றி நாம் அறிந்தால், அது நீண்ட காலத்திற்கு புதியதாகவும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். நம் வீடுகளில் சரியாகவும், முறையாகவும் வைக்கத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் அவை சில நாட்களிலேயே கெட்டுப் போகத் தொடங்கிவிடும். சமையலறையை நிர்வகிப்பது எளிதல்ல. மேலும், பொருட்களை நிர்வகிப்பது மற்றும் அவற்றை சரியாக சேமித்து வைப்பது ஒரு பிரச்சனையே இல்லை. பொருட்களை சேமிக்க, நாம் சிந்தனையுடன் வேலை செய்ய வேண்டும். சேமிப்பு என்ற பெயரில் குளிர்சாதனப்பெட்டியில் எல்லாவற்றையும் சேமித்து வைக்க முடியாது, நீண்ட நேரம் எல்லாவற்றையும் புதியதாக வைத்திருக்க, அவற்றை வைக்க சரியான இடம் மற்றும் வெப்பநிலையை நாம் அறிந்திருக்க வேண்டும்.

27

நம் சமையலறையில் ஊறுகாய், நெய், உப்பு என பல வருடங்கள் சேமித்து வைக்கக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பல ஆண்டுகளாக, சமையலறை பொருட்களை நீண்ட காலத்திற்கு சேமிக்க நம் தலைமுறைகளால் பல தந்திரங்கள் பின்பற்றப்படுகின்றன. இப்பதவில் நாம், இதுபோன்ற சில தந்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். அவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்கள் சமையலறை திரவங்களை நீண்ட நாள் வைத்திருக்க முடியும் மற்றும் சேமிக்கவும் முடியும்.

37

சோயா சாஸ்:
சோயா சாஸ் பொதுவாக சீன ரெசிபிகளை சுவைக்க வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் வீட்டில் வைத்திருக்கும் சோயா சாஸை குளிர்சாதனப் பெட்டியிலோ அல்லது குளிர்ச்சியான இடத்திலோ வைக்கவும், அது நீண்ட நேரம் பயன்படுத்தப்படலாம்.

இதையும் படிங்க: ஹைப்ரிட் வொர்க் புரட்சியை ஏற்றுக்கொள்ளுதல் : உத்திகள், கருவிகள் மற்றும் எதிர்காலப் போக்குகள்!

47

வினிகர்:
வினிகர் பொருட்களை சுத்தம் செய்யவும், பொருட்களை அதிக நேரம் புத்துணர்ச்சியுடன் சேமிக்கவும் பயன்படுகிறது. உங்கள் வீட்டில் வைக்கப்படும் வினிகரை பிளாஸ்டிக் அல்லது மற்ற உலோகப் பாத்திரத்தில் வைப்பதற்குப் பதிலாக, ஒரு கண்ணாடியில் வைக்கவும். அதுவும், காற்று புகாத பாட்டிலில் வைக்கவும், இவ்வாறு செய்தால், அது நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். வினிகரின் மூடியை எப்போதும் மூடி வைக்கவும். 

57

தயிர்:
தயிரை நீங்கள் எப்போதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது கண்ணாடி பாத்திரத்தில் வைத்து வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் அது நீண்ட நாளாகபும், புதிதாகவும் இருக்கும். அதே சமயம், ஒவ்வொரு வாரமும் அதன் பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருங்கள். இல்லையெனில் அது விரைவில் கெட்டுவிடும்.

67

தேன்:
தேனை, எறும்புகள் எட்டாதவாறு ஒரு கண்ணாடி அல்லது சர்க்கரை ஜாடியில் சேமிக்கவும். குறிப்பாக கலப்படம் இல்லாத தேன் ஆக இருந்தால் அது பல ஆண்டுகளாக புதிதாக இருக்கும். மேலும் குளிர்சாதன பெட்டியில் தேனை ஒருபோதும் சேமிக்க வேண்டாம். ஏனெனில் அது கெட்டுவிடும். 
 

77

நெய்:
ஒருபோதும் நெய்யை பிளாஸ்டிக் டப்பாவில் வைக்க வேண்டாம். அவ்வாறு வைப்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், விரைவில் கெட்டுவிடும். கண்ணாடி மற்றும் ஸ்டீல் பாத்திரங்களில் நெய் சேமித்து வைக்கவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories