The Benefits of Bedtime Stories for Children: பெற்றோர்கள் தினமும் ஒரு கதை சொல்வதால் குழந்தைகளிடம் ஏற்படும் அற்புதமான மாற்றங்கள் என்னென்ன என்று நிபுணர்கள் சொல்வதை இங்கே பார்க்கலாம்.
பல பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பு, விளையாட்டு, இதர வகுப்புகள் மீது மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், தினமும் ஒரு கதை சொல்லும் சின்ன பழக்கத்தை மறந்துவிடுகிறார்கள். இது வெறும் பொழுதுபோக்குக்காக செய்யும் வேலை மட்டுமல்ல. இதனால் பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் ஒரு கதை சொல்வதால் குழந்தைகளிடம் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
25
கற்பனைத்திறன் அதிகரிக்கும்
கதைகள் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கின்றன. கதையில் வரும் கதாபாத்திரங்கள், காடுகள், விலங்குகள், ராஜாக்களை குழந்தைகள் தங்கள் மனதில் படங்களாகக் கற்பனை செய்வார்கள். இந்தச் செயல்முறை அவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்கிறது. இதனால், அவர்கள் ஓவியம் வரைவது, புதிய யோசனைகளைச் சொல்வது அல்லது பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளை யோசிப்பது போன்றவற்றைச் செய்வார்கள். தினமும் கதை கேட்கும் குழந்தைகளிடம் மொழி அறிவும் வேகமாக வளரும். புதிய வார்த்தைகள், வாக்கிய அமைப்பு, சரியான உச்சரிப்பு, உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் போன்றவை இயல்பாகவே அமையும். புத்தகங்கள் படிக்கும் ஆர்வமும் அதிகரிக்கும். இது படிப்பு மற்றும் தகவல் தொடர்புத் திறன்களில் (Communication Skills) அவர்களுக்குப் பெரிதும் உதவும்.
35
தார்மீக மதிப்புகள்
குழந்தைகளிடம் தார்மீக விழுமியங்களை வளர்ப்பதில் கதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நேர்மை, கருணை, உதவும் குணம், ஒழுக்கம், பொறுப்பு, பெரியவர்களிடம் மரியாதை போன்றவற்றை நேரடியாக போதிப்பதை விட, ஒரு நல்ல கதை மூலம் சொல்லும்போது குழந்தைகள் அவற்றை எளிதாகப் புரிந்துகொள்வார்கள். கதையில் ஹீரோ செய்த நல்ல காரியம் அல்லது வில்லன் செய்த தவறு மூலம் எது சரி, எது தவறு என்ற புரிதல் அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும். மேலும், உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் திறனும் கதைகள் மூலம் வளர்கிறது. கதையில் ஒரு கதாபாத்திரம் கவலைப்படும்போது, மகிழும்போது, அல்லது பயப்படும்போது, குழந்தைகளும் அந்த உணர்வுகளை உணர முயற்சிப்பார்கள். இதனால், மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பது, பச்சாதாபத்துடன் சிந்திப்பது போன்ற குணங்கள் வளரும்.
தினமும் கதை சொல்வது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும். கதை சொல்லும் நேரத்தில், மொபைல், டிவி போன்ற டிஜிட்டல் சாதனங்களிலிருந்து விலகி, ஒருவருக்கொருவர் நேரம் செலவிடுகிறார்கள். இந்தச் சில நிமிடங்கள் கூட, குழந்தைகளுக்கு பாதுகாப்பு, அன்பு, பாசம் போன்ற உணர்வுகளைக் கொடுக்கும். கதை கேட்கும் குழந்தைகளிடம் கவனம் செலுத்தும் திறன் மேம்படும். ஒரு கதையை முழுமையாகக் கேட்க, கூர்ந்து கவனிப்பது அவசியம். இந்தப் பழக்கம் படிப்படியாக அவர்களின் கல்விக்கும் உதவும். பாடங்களைக் கேட்பது, புரிந்துகொள்வது, நினைவில் கொள்வது போன்ற திறன்கள் வளரும். குறிப்பாக, சிறு வயதில் இந்தப் பழக்கம் ஏற்பட்டால், அது அவர்களின் படிப்புக்கு நல்ல அடித்தளமாக அமையும்.
55
நிம்மதியான தூக்கம்
ஸ்கிரீன் டைம் அதிகமாக உள்ள இந்தக் காலத்தில், கதைகள் ஒரு நல்ல மாற்றாக அமைகின்றன. தூங்குவதற்கு முன் மொபைல் அல்லது டிவி பார்ப்பதற்குப் பதிலாக, கதை கேட்பதால் குழந்தைகள் நிம்மதியாகத் தூங்குவார்கள். கண்களில் ஏற்படும் அழுத்தம் குறைவதோடு, மூளையும் ஓய்வெடுக்கும். இதனால், தூக்கத்தின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது.
ஆனால், கதை சொல்லும்போது சில விஷயங்களைக் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயமுறுத்தும் அல்லது வன்முறையை அதிகம் காட்டும் கதைகளை விட, ஊக்கமளிக்கும், வேடிக்கையான, நல்மதிப்புகளைக் கற்பிக்கும் கதைகளைச் சொல்வது நல்லது. கதை சொல்லி முடித்த பிறகு, "இந்தக் கதையில் உனக்கு என்ன பிடித்தது?", "நீ அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?" போன்ற சிறிய கேள்விகளைக் கேட்டால், குழந்தைகளிடம் சிந்திக்கும் திறன் மேலும் அதிகரிக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.