நண்பர்கள் தினம், காதலர் தினம், சகோதர் தினம் என எத்தனையோ பண்டிகைகள் விழாக்கள் வந்து செல்கின்றனர், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில், ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு ஆகியவற்றை கற்பிக்கும் ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில், ஆசிரியர் தினம் உலகளவில் பொதுவாக அக்டோபர் 5 ஆம் தேதியும் சீனா, மலேசியா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளிலும் கொண்டாடப்படுகிறது.