Guru peyarchi: Planet Transits 2022: ஜோதிடத்தின் முக்கிய கிரகங்களான செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள் தனது ராசியை மாற்றியுள்ளன. இதனால், அடுத்த 118 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.
ஜோதிடத்தின் பார்வையில், நவ கிரகங்களின் பரிவர்த்தனைகள் மற்றும் ராசி மாற்றங்கள் ஒருவரது வாழ்வில் சுப மற்றும் அசுப பலன்களை தருபவை. அப்படியாக, முக்கிய கிரகங்களான செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றியுள்ளன. அவற்றின் பலன் அடுத்த 118 நாட்கள் இருக்கும். அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி 6 வரை நீடிக்கும். இந்த நேரத்தில், இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். அவர்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும். அப்படிப்பட்ட எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும் என்பதை பார்ப்போம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு வரும் மாதங்களில் பல நல்ல செய்திகள் கிடைக்கும்.நீங்கள் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் மிகப்பெரிய வெற்றியைக் காணலாம். இந்த கால கட்டத்தில் மிதுன ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே இருந்த நீண்ட நாள் மனக்கசப்பு நீங்கும்.
கிரகங்களின் மாற்றம், துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய ராசிகள் மாறுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். புதொழிலில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். இதன் காரணமாக பல முக்கிய வேலைகள் நிறைவடையும்.
44
Sun and Venus Transit
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பெயர்ச்சி வரப்பிரசாதமாக இருக்கும். இதனால் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவார்கள். வியாபாரம் அதிகரிக்கலாம். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், இந்த நேரத்தில் அதை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். போட்டி தேர்வுகள், சிறப்பாக இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.