உங்கள் பூஜை பாத்திரங்கள் பளபளன்னு மின்ன வேண்டுமா..? அப்படினா..இதை ஒருமுறை தயார் செய்து பயன்படுத்தினாலே போதும்

First Published | Sep 3, 2022, 6:04 AM IST

Pooja vessels cleaning tips in tamil: உங்கள் பூஜை அறை செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை வைரம் போல், பத்து நிமிடத்தில் எப்படி பளபளப்பாக சுத்தம் செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்று வரை, பூஜை பாத்திரங்கள் பெரும்பாலும் பித்தளை அல்லது செம்பு பாத்திரங்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நம் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்கள் எப்பொழுதும் ரொம்பவும் பளிச்சுனு இருந்தா வாழ்க்கையும் பளிச்சுன்னு இருக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால், இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்குள் நமக்கு இடுப்பு உடைந்து விடும்.  

copper

இந்த பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களை வாரம் ஒரு முறை தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டே வந்தால், நமக்கு  நேரமும் மிச்சம் ஆகும், பாத்திரமும் பளபளன்னு கிடைக்கும். ஒருவேளை நீண்ட நாட்கள் நீங்கள் சுத்தம் செய்யாமல் போட்டு விட்டால் எளிதில் சுத்தம் செய்ய இந்த ஒரே ஒரு பேஸ்ட் மட்டும் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்..உங்கள் பாத்திரங்கள் வைரம் போல் பளபளன்னு மின்னும். அப்படியாக, வீட்டில் இருந்த படியே இந்த எளிய பேஸ்ட் எப்படி தயார் செய்வது என்பதை இனி பார்ப்போம்.

மேலும் படிக்க..Shukra Peyarchi 2022: சுக்கிரன் சிம்ம ராசியில் அஸ்தமனம்..ராஜபோக வாழ்கை வாழும் 4 யோகம் கொண்ட ராசிகள்..

Tap to resize

முதலில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், சிறிதளவு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைத்து பேஸ்ட் போல கரைத்து கொள்ள வேண்டும். இந்த புளி பேஸ்ட் சற்று கெட்டியாக இருக்க வேண்டும். பின்னர் இதனுடன் அரை கப் அளவிற்கு சபீனா பவுடர் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க..Shukra Peyarchi 2022: சுக்கிரன் சிம்ம ராசியில் அஸ்தமனம்..ராஜபோக வாழ்கை வாழும் 4 யோகம் கொண்ட ராசிகள்..

பின்பு,  இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தூள் உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நீங்கள் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் லிக்வீட் அல்லது சோப் ஏதாவது இருந்தால் அதை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். 

பூஜை பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து, இந்த பேஸ்ட்டை முழுவதுமாக எல்லா இடங்களிலும் படும்படி தேய்த்து ஊற விட்டு விடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து, தேங்காய் நார் கொண்டு லேசாக தேய்த்தால் போதும், பளபளன்னு எல்லா பாத்திரமும் மின்ன ஆரம்பிக்கும்.  இதே மாதிரி நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பூஜை பாத்திரங்களை கழுவி பாருங்கள்.பாத்திரம் வைரம் போல் ஜொலிக்கும்.

மேலும் படிக்க..Shukra Peyarchi 2022: சுக்கிரன் சிம்ம ராசியில் அஸ்தமனம்..ராஜபோக வாழ்கை வாழும் 4 யோகம் கொண்ட ராசிகள்..

Latest Videos

click me!