தாய்மை அடைந்தவுடன் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள விரும்புவது, கருவில் இருக்கும் குழந்தை ஆணா..? இல்லை பெண்ணா..? என்பதை பற்றி தான். கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை பிறக்க பத்து மாதம் ஆகும். இருப்பினும், நம்மால் பத்து மாதம் வரை வெயிட் பண்ண முடியாது. மனதில் எப்போதும் குழந்தையின் பாலினம் தொடர்பான கேள்விகள் ஓடிக் கொண்டே தான் இருக்கும்.
pregnancy yoga
இருப்பினும், நம்முடைய முன்னோர்கள் உங்கள் கேள்விகளுக்கான விடையை, ஒரு சில அறிகுறிகளை வைத்து கணித்துள்ளனர். அவை பெரும்பாலான நம்பகத்தன்மை உடையதாக இருந்துள்ளது..உங்களுக்கு, முன்னோர்களின் கணிப்பில் நம்பிக்கை இருந்தால் இந்தப் பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்..அவை என்னென்னெ என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..
வயிற்றின் தன்மை:
பெண் கர்ப்பமாக இருக்கும் போது, நாட்கள் செல்ல, செல்ல வயிறு பெரிதாகி கொண்டே தான் இருக்கும். அப்படியான நேரத்தில், பெண்களின் வயிறு பெரிதாகி வளரும் வீதம் மேல் நோக்கி இருந்தால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும். ஒருவேளை, கர்ப்பிணியின் வயிறு கீழ் நோக்கி வளர்ந்தால் அவர்கள் ஆண் குழந்தை பிறக்கும். ஒருவேளை வயிற்றின் அளவு மிதமிஞ்சிய அளவில் இருந்தால் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும்.
கர்ப்பமாக இருக்கும் பெண் எரிச்சல் படும் குணம் கொண்டு இருந்தால், அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்குமாம். அதுவே, அதிகாரம் குணம் கொண்டிருந்தால் ஆண் குழந்தை பிறக்குமாம். குழந்தை தன்னுடைய செயல்களுக்கு ஏற்ப தாயினை ஆட்டி வைக்குமாம்.
பொதுவாக அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் உணர்வில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சிலருக்கு அதிகமாக இருக்கும். மூட் ஸ்விங்க்ஸ் அதிகமாக இருந்தால் பெண் குழந்தை என்பார்கள்.
அதேபோன்று, ஒரு தாய் தனது இடது பக்கத்தில் தூங்க விரும்பினால், ஆண் குழந்தை என்றும், அது வலது பக்கமாக இருந்தால், பெண் குழந்தை என்றும் சொல்வார்கள்.
கூந்தலின் வளர்ச்சி கூட கருவில் உள்ளது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை அறிய உதவும். கர்ப்பிணி பெண்ணுக்குக் கூந்தல் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பட்சத்தில் பிறக்கப்போவது ஆண் குழந்தையாக இருக்கக் கூடும்.