Herb for Diabetes: நீரழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் சர்க்கரை கொல்லி..இப்படி ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்..

First Published Sep 3, 2022, 7:04 AM IST

Herb for Diabetes: நீரிழிவு நோயாளிகள் இயற்கையான சில வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் இரத்தில் உள்ள சர்க்கரையை சிறந்த வகையில் கட்டுப்படுத்தலாம்.

Herb for Diabetes:

சர்க்கரை வியாதி என்பது வீட்டில் எவரேனும் ஒருவருக்கு வரும், உலகளாவிய நோயாக மாற துவங்கியுள்ளது. ஒருவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கு தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக இருக்கிறது. இதற்கு நீரிழிவு நோயாளிகள் மருந்துகள் மற்றும் சில வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் இரத்தில் உள்ள சர்க்கரையை சிறந்த வகையில் கட்டுப்படுத்தலாம்.

மேலும் படிக்க...Constipation: மலச்சிக்கல் பிரச்சனை பாடாய்ப்படுத்துதா..? இதில் இருந்து நிரந்தரமாக விடுபட ஈஸியான வழிமுறைகள்..

Herb for Diabetes:

அந்த வகையில் சிறுகுறிஞ்சான் அல்லது கோகிலம் (Gymnema sylvestre) என்ற மூலிகை ஒரு சிறந்த வரப்பிரசாதம் எனலாம். இந்த சிறுகுறிஞ்சான் என்ற மூலிகை, சர்க்கரை கொல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இது இனிப்பு மற்றும் கசப்புச் சுவை கொண்டதாக உள்ளது. 

மேலும், இந்த இலைகள் விஷக்கடி மூலம் உடலில் பரவும் விஷத்தன்மை,  எடை குறைப்பு, சளி, சரும நோய்கள் என அனைத்திற்கும் எதிராக சிறந்த மருந்தாக செயல் படுகிறது.

மேலும் படிக்க...Constipation: மலச்சிக்கல் பிரச்சனை பாடாய்ப்படுத்துதா..? இதில் இருந்து நிரந்தரமாக விடுபட ஈஸியான வழிமுறைகள்..

Herb for Diabetes:

இந்த சிறுகுறிஞ்சான் கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இந்த மூலிகை உள்ளது. இதன் இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாய் இலை போன்று காணப்படும்.

எனவே, நீங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தினமும் வெறும் வயிற்றில் சிறுகுறிஞ்சான் இலைகளை சாப்பிட வேண்டும். எனவே, சர்க்கரை நோய்க்கு சிறு குறிஞ்சான் அருமருந்து என்று பல ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது.

Herb for Diabetes:

இது கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெறச் செய்து இன்சுலின் அளவை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய இரு வகை நீரிழிவு நோய்களுக்கு உகந்தது. 

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சிறு குறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமாகும். அதுமட்டுமின்று, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, உடலை சமநிலைப்படுத்துவதற்கும் மிகவும் உதவுகிறது. மேலும், நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கு, நாவல் பழம், வெண்டைக்காய் போன்றவைவும் உதவுகிறது.

மேலும் படிக்க...Constipation: மலச்சிக்கல் பிரச்சனை பாடாய்ப்படுத்துதா..? இதில் இருந்து நிரந்தரமாக விடுபட ஈஸியான வழிமுறைகள்..

click me!