புளி சமையலுக்கு மட்டுமல்ல.. முகத்தை அழகாக்கவும் பயன்படுத்தலாம் தெரியுமா..?

First Published | Sep 5, 2024, 11:01 AM IST

Tamarind Face Pack : புளியை வைத்து எப்படி ஃபேஸ் பேக் தயாரிக்க முடியும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.

பெண்கள் ஒவ்வொருவரும் தான் அழகாக இருக்க வேண்டும் என்று எப்போதும் விரும்புவார்கள். இதற்காக அவர்கள் வீட்டில் இருந்தபடியே நிறைய பேஸ் பேக்குகளை முயற்சித்து இருப்பார்கள். பொதுவாகவே, ஃபேஸ் பேக்குகளில் பலவகைகள் உண்டு.

ஆனால், நீங்கள் எப்போதாவது புளியை வைத்து ஃபேஸ் பேக் பயன்படுத்தி இருக்கிறீர்களா? புளியை வைத்து முகத்தை எப்படி அழகாக மாற்ற முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், நிச்சயமாக மாற்ற முடியும் என்று நாங்கள் சொல்லுகிறோம். புளியை வைத்து எப்படி ஃபேஸ் பேக் தயாரிக்க முடியும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

புளி ஃபேஸ் பேக் : இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க முதலில், சிறிதளவு புளியை ஊறவைத்து பிறகு அதிலிருந்து 1 ஸ்பூன் சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் 1 ஸ்பூன் தயிர், ரோஸ் வாட்டர் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இதை மூன்றையும் நன்றாக கலக்கி, முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். புளி மற்றும் தயிர் சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும்.

முகம் பளபளப்பாக : 

தேவையான பொருட்கள் :

புளி கரைசல் - 2 ஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை : முதலில் ஒரு கிண்ணத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, அவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு அந்த பேஸ்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, 5 நிமிடம் கழித்து முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்யவும். இப்படி செய்தால் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவடையும். அதுமட்டுமின்றி, முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளும் நீங்கும்.

Latest Videos


எப்போதும் இளமையாக இருக்க : 

தேவையான பொருட்கள் :

புளி கரைச்சல் - 3 ஸ்பூன்
ரவை - 1 ஸ்பூன்
கடலை மாவு - 2 ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை : இப்போது ஒரு கிண்ணத்தில் புளி கரைச்சலை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் கடலை மாவு, தேன், ரவை ஆகியவற்றை போட்டு அவற்றை நன்றாக கலந்து பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் முகம் இளமையாக இருக்கும்.

இதையும் படிங்க:  வாழைப்பழத் தோல் உண்மையில் கரும்புள்ளிகள், முகப்பரு நீக்க உதவுமா?!

முக பருக்கள் மறைய :

தேவையான பொருட்கள் :

புளி கரைச்சல் - 1 கப்
அரிசி - 1/2 கப்
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை : இதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் புளி கரைசலையும், அரிசி செய்யும் சேர்த்து வறுக்கவும். அவற்றின் நிறம் மாறியதும், அதே அடுப்பில் இருந்து கீழே இறக்கி, ஆற வைத்து பிறகு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அரைத்த இந்த பேஸ்ட்டில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து, பின் அதை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் தழும்புகள் மறையும்.

முகம் சுருக்கம் நீங்க : இதற்கு அரைக்கப் புலி மற்றும் இரண்டு ஸ்பூன் தேயிலை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, எடுத்து வைத்த புளியை போட்டு சுமார் 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு அந்த தண்ணியை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல தேயிலையையும் கொதிக்க வைத்து, அந்த நீரையும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த இரண்டின் நீரையும் ஒன்றாக கலந்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி முகத்தில் தோழராக பயன்படுத்தலாம். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் குறையும்.

இதையும் படிங்க:  ஆட்டுப்பால் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல... சருமத்திற்கு ஸ்பெஷல் தான். எப்படி தெரியுமா?

click me!