துளசி நீரின் நன்மைகள் :
சளி இருமல் தொண்டை புண் : பொதுவாகவே மழைக்காலத்தில் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகள் வருவது வழக்கம். ஆனால், இதனால் நீங்கள் அடிக்கடி அவதிப்படுகிறீர்கள் என்றால், துளசி நீரை தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது : துளசி நீரானது சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது என்று சொல்லலாம். ஏனெனில், இந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவானது கட்டுப்படுத்தப்படும். எனவே, நீங்கள் இயற்கை முறையில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்பினால் துளசி நீர் உங்களுக்கு பெரிதும் உதவும்.
காய்ச்சலுக்கு நல்லது : பருவமழை காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் தாக்குவது காய்ச்சல்தான். எனவே, இந்த பருவத்தில் தினமும் காலை வெறும் வயிற்றில் துளசி நீர் குடித்து வந்தால், எந்தவிதமான தொற்று நோய்களும் உங்களை அண்டாது மற்றும் காய்ச்சலில் இருந்தும் விடுவிக்கும்.