
உலர் பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் உலர் பழங்களில் ஒன்றுதான் பாதாம். பாதாம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ஏனெனில் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நாம் தினமும் பாதம் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால், எடை, பிபி போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். மேலும் இது மூளை, முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இத்தனை நன்மைகள் நிறைந்துள்ள இந்த பாதாமை, நாம் அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதை ஊற வைத்து சாப்பிட்டால் அதன் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்குமாம். ஆனால், பாதாமை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. எனவே, பாதாமை அதிகபட்ச பலன்களை பெற எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்? அதன் நன்மைகள் என்ன? எப்படி ஊற வைக்க வேண்டும்? என்பதை குறித்து இந்த கட்டுரைகள் நாம் பார்க்கலாம்.
பாதாமை ஏன் ஊற வைக்க வேண்டும்?: பாதாமை ஊற வைத்து சாப்பிட்டால் அவை எளிதில் ஜீரணமாகி, அவற்றின் சத்துக்களும் எளிதில் உறிஞ்சப்படும். அதுமட்டுமின்றி, பாதாமில் பைட்டிக் அமிலம், என்சைம் தடுப்பான்கள் உள்ளதால், அவை ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்க உதவுகிறது. எனவே, பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் இந்த கூறுகள் அனைத்தும் அழிக்கப்படும்.
பாதாமை எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும்?: பொதுவாக பாதாமை எட்டு முதல் 12 மணி நேரம் ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும் இதனால் பாதாமில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, பாதாமை ஊற வைத்தால் பைட்டிக் அமிலம் உடைக்கப்படும். இதனால் பாதாம் இருக்கும் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் உடலில் எளிதில் உறிஞ்சப்படும்.
இதையும் படிங்க: ஊறவைத்த பாதாமை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா? இதுதான் அது..
இவ்வளவு நேரம் ஊறவைத்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?: ஊற வைத்த பாதாமில் நொதிகள் செயல்படுத்தப்பட்டு புரதங்கள் மற்றும் கொழுப்புகள் உடைக்கப்படுகிறது. இதனால் செரிமான அமைப்புக்கு ரொம்பவே நல்லது. குறிப்பாக, உணர்திறன் வாய்ந்த வயிறு உள்ளவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமின்றி பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் அது சாப்பிடுவதற்கு மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். முக்கியமாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சாப்பிடும் வகையில் ஏற்றதாக இருக்கும்.
பாதாம் ஊற வைக்கும் முறை : முதலில் உங்களுக்கு தேவையான அளவு பாதாம எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதை நன்கு கழுவி ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது கிண்ணத்தில் நிறைய தண்ணீர் ஊற்றுங்கள். பிறகு அதை மூடி, அரை வெப்ப நிலையில் 8 முதல் 12 மணி நேரம் ஊற வைக்கவும். நீங்கள் விரும்பினால் இரவு முழுவதும் ஊற வைக்கலாம். பின் மறுநாள் அதை தண்ணீரில் இருந்து எடுத்து, அப்படியே சாப்பிடுங்கள்.
முக்கிய குறிப்பு :
நீங்கள் பாதாமை ஊற வைக்கும் நேரமானது, அதை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து அமையும்.
அதாவது, நீங்கள் ஊறவைத்த பாதாமை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் 8 முதல் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதுவே நீங்கள் ஊறவைத்த பாதாமை சமையலில் அல்லது பேக்கிங்கில் பயன்படுத்த போகிறீர்கள் என்றால், அதன் செயல்முறையை பொறுத்து ஊறவைக்கும் நேரத்தை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் பாதாம் பால் செய்யப் போகிறீர்கள் என்றால் 12 மணி நேரம் கண்டிப்பாக ஊற வைக்க வேண்டும் அப்போதுதான் பால் கெட்டியாக வரும். நீங்கள் சாலட் அல்லது காலை உணவில் பாதம் சேர்க்க விரும்பினால் சிறிது நேரம் மட்டுமே ஊற வைத்தால் போதும்.
இதையும் படிங்க: Weight Loss Tips: எடை இழப்புக்கு எது சிறந்தது? பச்சை அல்லது ஊறவைத்த பாதாம்?