நல்ல தூக்கம் வர : இரவில் உங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றால் இரவு தூங்கும் முன் வெங்காயத்தோல் டீ போட்டு குடியுங்கள். இதற்கு சூடான நீரில் வெங்காயத் தோலைப் போட்டு 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு வடி கட்டி, அதனுடன் தேன் கலந்து குடிக்கவும் இப்படி குடித்தால், இரவில் நிம்மதியாக தூங்குவீர்கள்.
தோல் அரிப்பு நீக்க உதவுகிறது : வெங்காயத் தோலில் ஏற்கனவே பூஞ்சை காளான் பண்புகள் உள்ளது. எனவே, இவற்றை தோலில் தடவுவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவற்றை சுலபமாக நீக்கலாம். அதுமட்டுமின்றி, வெங்காயத்தோலை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, பிறகு அந்த நீரை சருமத்தில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கொசுக்கள் மற்றும் ஈக்களை விரட்ட : வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு, அவை வரும் ஜன்னல் பகுதியில் வைக்கவும். வெங்காயத் தோலில் இருந்து வரும் பூஞ்சை வாசனை கொசுக்கள் மற்றும் ஈக்களுக்கு பிடிக்காது. இதனால் அவை உங்கள் வீட்டிற்கு ஒருபோதும் வரவே வராது.