சுல்தான் ஹசானல் போல்கியா 1967 ஆம் ஆண்டு தனது 21வது வயதில் புருனேயின் அரியணை ஏறினார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட பரம்பரையில் இருந்து வந்த இவர் போல்கியா குடும்பத்தின் 29வது வாரிசு ஆவார். மன்னராட்சி என்ற பாத்திரத்திற்கு அப்பால், அவர் புருனேயின் பிரதம மந்திரி, வெளியுறவு மந்திரி மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றுகிறார், நாட்டின் நிர்வாகத்தில் முக்கியமான நபராகவும் இருக்கிறார்.
புருனேயின் சுல்தான் தனது தலைமைக்கு மட்டுமல்ல, தனது அபரிமிதமான செல்வத்திற்கும் புகழ் பெற்றவர். 2009 இல், ஃபோர்ப்ஸ் அவரது சொத்து மதிப்பு ரூ.1.36 லட்சம் கோடி என்று மதிப்பிட்டது. இருப்பினும், அவரது சொத்து இரட்டிப்புக்கு மேல் அதிகரித்து, தற்போது ரூ.2.88 லட்சம் கோடியைத் தாண்டி, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுல்தானின் முதன்மையான செல்வம் புருனேயின் ஏராளமான எண்ணெய் இருப்புக்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து வருகிறது. இந்த வளங்கள் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவி உள்ளது. மேலும் சுல்தானின் பரந்த செல்வத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. புருனேயின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் வளமான வைப்பு, தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் புருனே பணக்கார நாடுகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது.