சும்மா உள்ளங்கையை ஒன்றோடு ஒன்றாக தேய்ப்பதால் கிடைக்கும் அசரடிக்கும் நன்மைகள்!! 

First Published | Sep 4, 2024, 2:53 PM IST

Rubbing Hands Benefits : தினமும் சில நிமிடங்கள் உள்ளங்கையை தேய்ப்பதால் மன அழுத்தம் நீங்கும். வலி நிவாரணம் உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் கிடைக்கும். 
 

rubbing hands

பண்டைய காலத்தில் இருந்தே நம்முடைய இரண்டு கைகளையும் தேய்ப்பதால் உருவாகும் வெப்பம் பல நன்மைகளை தரும் என நம்பப்பட்டு வருகிறது. மன அழுத்தத்தை குறைத்து நமது நரம்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.  வலி நிவாரணம் முதல் நினைவாற்றலை அதிகரிப்பது வரை, உள்ளங்கை தேய்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். 

உங்களுக்கு மன அழுத்தம் அல்லது கவலை ஏற்பட்டால் உடனே உங்கள் உள்ளங்கைகளை ஒன்றாக வைத்து தேய்த்து பாருங்கள். இதுவரை செய்தது இல்லையென்றாலும் இனிமேல் செய்து பாருங்கள். இது உடல் குளிர்ச்சியாக இருக்கும்போது வெப்பத்தை உருவாக்கும் எளிய பயிற்சிதான். ஆனால் இதனால் கிடைக்கும் பலன்களோ ஏராளம். 

மன அழுத்தம்

நமது உள்ளங்கைகளை ஒன்றாக தேய்த்தால் கைகளில் இரத்தம் ஓட்டமும் ஆற்றல் சுழற்சியும் அதிகரிக்கிறது. அது நம்முடைய மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். உங்களுடைய மனம் சோர்வாக இருந்தால் அல்லது எதிலும் கவனம் செலுத்தாமல் அலைபாய்ந்தால் உள்ளங்கையை தேய்ப்பதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இது உங்களுடைய கவனத்தை சிதறாமல் ஒருமுகப்படுத்தும். எண்ணங்களை  கூர்மைப்படுத்த இந்த பயிற்சி உதவும். நீங்கள் அலுவலகத்தில் கணினியில் வேலை செய்பவராக இருந்தால் அவ்வப்போது சின்ன ப்ரேக் எடுத்து உள்ளங்கையை தேய்த்து பாருங்கள். புத்துணர்ச்சியும் நேர்மறை ஆற்றலும் உங்களிடம் இருப்பதாக உணர்வீர்கள். 

கவலைகள் மறையும் 

உள்ளங்கையை தேய்ப்பதால் மன அழுத்தம் படிப்படியாக குறையும்.  கவலைக்கான அறிகுறிகள் மனதில் மட்டுப்படுத்தப்படும். இந்த மாற்றங்கள் உடல் ரீதியாக வெளிப்படையாக தெரியும்.  உள்ளங்கையில் தேய்ப்பதால்  உருவாகும் வெப்பம் நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸாக வைக்க உதவும். மனதை அமைதியாக வைக்கும். உள்ளங்கைகளை ஒன்றாக தேய்ப்பதால் உண்டாகும் தாள இயக்கம் கவலையான எண்ணங்களில் இருந்து உங்களை விலக்கி வைக்கும். 

Tap to resize

சமநிலை உணர்வு

உள்ளங்கையை தேய்ப்பதால் உருவாகும் வெப்பம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் நம்முடைய சிந்தனைகள் மேம்பட்டு ஆரோக்கியம் முன்னேறும். உள்ளங்கையில் உரசுவது மூலம், உடலில் இருக்கும் உணர்ச்சித் தடைகள் அவிழ்கின்றன. மனதினுள் அமைதி பிறக்கிறது. சீன மருத்துவம் இந்த முறையால் குய் எனும் முக்கிய ஆற்றல் ஓட்டம் தூண்டபடுவதாக சொல்கிறது. உடலில் ஆற்றல் அதிகமாகும். தூக்க உணர்வு ஏற்பட்டால் சுறுசுறுப்பாக உணர இந்த பயிற்சியை செய்யலாம். இதனால் தூக்கம் சற்று தாமதமாக வரலாம். 

விறைப்புத்தன்மை

குளிர்காலத்தில் அல்லது குளிர்காற்று வீசும்போது கைகள் அல்லது விரல்களில் சிலர் விறைப்புத்தன்மையை உணர்வர். இந்த சந்தர்ப்பங்களில் உள்ளங்கையை தேய்க்கும் பழக்கம் வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். இது மாதிரி குளிர் சூழ்நிலைகளில் விரல்கள் விறைப்பு தன்மையை அடையாமலிருக்க இந்த பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.  மரத்துப்போன உணர்வு நீங்கி நெகிழ்வுத் தன்மை ஏற்படும். 

நல்ல தூக்கம்

உங்களுடைய உடல் தசைகள் பதட்டமாக இருந்தாலும், மனம் அமைதியின்றி தவித்தாலும் இரவில் தூங்குவதற்கு கடினமாக இருக்கும். இரவு தூக்கம் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் தவிப்பவர்கள்  உள்ளங்கையை தேய்க்கும் பயிற்சியை செய்யலாம். இது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி உடலையும், உள்ளத்தையும் ஓய்வுக்கு தயார் செய்கிறது. தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு உள்ளங்கையை தேய்த்து விட்டு தியான நிலைக்கு சென்று திரும்புவது, நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.  இதனால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். 

நினைவாற்றல் மேம்படும்

பதற்றம், மனதில் தொடர்ச்சியான கவலை, கவன சிதறல் போன்றவை நீங்கள் எண்ணங்களுடைய சுழற்சியில் சிக்கி உள்ளதை காட்டுகிறது. இது மாதிரியான நேரங்களில் இந்த பயிற்சியை செய்வதன் மூலம் நிகழ்காலத்திற்கு உங்களுடைய உணர்வுகளை திரும்பி வரச் செய்ய முடியும்.  கடந்த காலமும் எதிர்காலமும் நம் கையில் இல்லை. ஆகவே மனம் தொடர்ச்சியான கவலையான எண்ணங்களில் சிக்குண்டதாக தோன்றினால் இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்து முகத்தில் வையுங்கள். அந்த இளஞ்சூடு உங்களை நிகழ்காலத்திற்கு கொண்டு வரும். இதனால் மூளை செயல்திறன் அதிகமாகி நினைவாற்றல் மேம்படும். 

வலி நிவாரணம்

உள்ளங்கைகளை வேகமாக தேய்த்தபின் நம் கைகளில் உருவாகும் இளஞ்சூடு உடலின் வலி அல்லது புண்ணை இதமாக உணர வைக்க உதவும்.  இந்த வெப்பம் நமது இறுக்கமான தசைகளை தளர்த்த உதவுகிறது. அசௌகரியத்தை உணர்வை தவிர்க்க உதவும். சிறு வலிகளுக்கு எளிய தீர்வு. சூடான கைகளை வலி அதிகமுள்ள இடங்களில் வைத்தால் அப்பகுதியில் இரத்த ஓட்டம் மேம்படும். வலி குறைவதை உணர முடியும். வெகு நேரம் கணினி திரையை கண்டு வேலை செய்பவர்கள் கண்கள் அசௌகர்யமாக உணரும்போது கைகளைத் தேய்த்து கண்ணில் ஒத்தி எடுக்கலாம்.  

உடலை இலகுவாக்கும்! 

தீவிரமான உடற்பயிற்சி, கடினமான வேலைகள், யோகா போன்றவை செய்பவர்கள் சோர்வாக உணரலாம். கடும் உடற்பயிற்சிக்கு பின்னர் உடலை தளர்வாக உணர செய்வது அவசியம். அப்போதுதான் அடுத்த நாள் பயிற்சிக்கு உடல் தயாராக இருக்கும். அவர்கள் பயிற்சிக்கு பின்னர் தங்கள் உள்ளங்கைகளை தேய்ப்பதால் உருவாகும் இளஞ்சூடு பதற்றத்தை குறைக்க உதவும். 

rubbing hands

உள்ளங்கையை தேய்க்கும் பயிற்சி: 

உள்ளங்கையில் வெப்பத்தை உருவாக்க இரண்டு கைகளையும் ஒன்றாக வைத்து தேய்க்க வேண்டும். உள்ளங்கையில் குறிப்பிடத்தக்க வெப்பம் உணரும் வரைக்கும் தொடர்ந்து செய்யுங்கள்.

கண்கள், முகம் அல்லது கால் என வலி நிவாரணம் அல்லது சற்று இலகுவாக உணர  விரும்பும் பகுதிகளில் சூடான கைகளை வைக்கலாம்.  

ஒவ்வொரு நாள் காலையும் இதனை ஒரு பயிற்சியாக செய்யலாம். உடற்பயிற்சி செய்த பின்னர் உள்ளங்கையில் தேய்ப்பதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். 

ஆன்மீகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் தினமும் காலையில் உள்ளங்கையை தேய்ப்பதை தொடர்ந்து செய்யலாம். சில நிமிடங்கள்  பிரார்த்தனை அல்லது நன்றியுடன் இந்த பயிற்சியை செய்யலாம்.

Latest Videos

click me!