Cucumber Seeds : வெள்ளரி விதையை சாதாரணமா எடை போடாதீங்க.. இந்த வயசுக்கு பின் பெண்கள் கட்டாயம் சாப்பிடனும்!!

Published : Aug 02, 2025, 01:00 PM IST

பெண்களின் ஆரோக்கியத்திற்கு வெள்ளரி விதை செய்யும் அற்புத நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
17
Health Benefits of Cucumber Seeds for Women

சூரியகாந்தி விதை, பூசணி விதை, ஆளி விதை போன்ற விதைகளை தற்போது பலரும் சாப்பிடுவதை பழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாம் வெள்ளரிக்காய் விதைகளை கண்டு கொள்வதில்லை. ஆனால், உங்களுக்கு தெரியுமா..! பிற விதைகளை போலவே வெள்ளரிக்காய் விதைகளையும் நாம் கட்டாயம் சாப்பிட வேண்டிய விதைகளில் ஒன்றாகும்.

ஏனெனில், அதில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி, பொட்டாசியம், புரதங்கள், நார்ச்சத்து, மக்சீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், ஆன்டிஆக்சிடன்ட்கள் போன்றவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையை பயக்கும்.

அதுவும் குறிப்பாக பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் வெள்ளரிக்காய் விதைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அது அவர்களின் உடலில் பலவிதமான அற்புதங்களை செய்யும் தெரியுமா? சரி இப்போது வெள்ளரிக்காய் விதைகள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பது குறித்து இந்த பதிவு காரணம்.

27
எடை குறைப்பதற்கு உதவும்

பொதுவாகவே வெயிட் லாஸ் டயட்டில் இருப்பவர்கள் வெள்ளரிக்காயை அதிகமாக எடுத்துக் கொள்வது வழக்கம். அதுபோலவே வெள்ளரிக்காய் விதையும் எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறது. ஏனெனில், வெள்ளரிக்காய் விதைகளில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்திருப்பதால், அவை வயிறு நீண்ட நேரம் நிரப்பிய உணர்வை கொடுக்கும். இதனால் சுலபமாக எடையை குறைக்கலாம்.

37
இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வெள்ளரிக்காய் விதைகள் உதவும். ஏனெனில் வெள்ளரிக்காய் விதையில் பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அவை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதனால் இதயம் தொடர்பான ஆபத்துகள் வருவது குறையும். இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

47
சருமத்திற்கு நல்லது

வெள்ளரிக்காய் விதைகளில் இருக்கும் வைட்டமின்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக அதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும் மற்றும் சருமம் சேதமடைவதை தடுத்து சருமத்தை எப்போதுமே பளபளப்பாகவும், பொலிவாகவும் வைக்க உதவும்.

57
ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சி

வெள்ளரிக்காய் விதையில் உள்ள வைட்டமின் பி முடியின் வேர்க்கால்களை உறுதியாக்கி, கூந்தல் உதிர்வதை தடுக்கும். மேலும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும்.

67
குடல் ஆரோக்கியம் மேம்பட

வெள்ளரிக்காய் விதையில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்களை விட பெண்கள் தான் குடல் ஆரோக்கியத்தால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் வெள்ளரிக்காய் விதை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

77
வெள்ளரிக்காய் விதையை பெண்கள் எப்படி சாப்பிடணும்?

- வெள்ளரிக்காய் விதைகளை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம். உங்களுக்கு நெய் பிடிக்கும் என்றால் வறுக்கும்போது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- ஓட்ஸ், ஸ்மூத்திகளில் கூட வெள்ளரிக்காய் விதைகளை சேர்க்கலாம்.

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழி படி, வெள்ளரிக்கவிதைகளை நீங்கள் அளவோடு எடுத்துக் கொண்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெற முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories