கால்களை வலுவாக்கும்:
சில நிமிடங்கள் பின்னோக்கி நடப்பது கால்களை வலுவாக்கும். இது கால்களின் பின்புறத்தில் உள்ள தசைகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கிறது. மேலும் கால்களுக்கு இந்த பயிற்சி அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. முன்னோக்கி நடைபயிற்சி செய்வதை விட பின்னோக்கி நடைபயிற்சி செய்வது கால்களுக்கு மிகவும் பயனுள்ள பயிற்சியாகும்.
உடல் எடையை குறைக்கும்:
முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடப்பது எடையை குறைக்க முக்கிய பங்கு வருகிறது. மேலும் இது உடலில் பின் பகுதியில் சேரும் கொழுப்பை குறைக்கும். தினமும் 15 நிமிடம் பின்னோக்கி நடைபெற்ற செய்து வந்தால் உடல் எடையை விரைவாக குறைக்கலாம்.
மன ஆரோக்கியத்தில் முன்னேற்றம்:
பின்னோக்கி நடக்கும்போது மனம் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் மூளைக்கு நல்ல உடற்பயிற்சியும் கிடைக்கும். தினமும் சில நிமிடங்கள் பின்னோக்கி நடைபயிற்சி செய்வதன் மூலம் மனசோர்வு, பதட்டம் போன்ற பிரச்சனைகள் குறையும்.