தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்ய சிம்பிளான வழி! இதைச் செய்தால் போதும்!

Published : Nov 03, 2024, 09:03 AM IST

பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்களை எதிர்க்கும் தன்மை கொண்ட நாவல் மரத்தின் துண்டுகளை தண்ணீர் தொட்டியில் போடுவது தண்ணீர் அசுத்தம் ஆகாமல் இருக்க உதவும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

PREV
15
தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்ய சிம்பிளான வழி! இதைச் செய்தால் போதும்!
water tank

வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். நீண்ட காலம் சுத்தம் செய்யாமல் இருந்தால் பூஞ்சை, பாக்டீரியா ஏற்பட்டு தண்ணீர் கெட்டுப் போகும். இப்படி மாசடைந்த தண்ணீரைக் குடிப்பது நோய் ஏற்படக் காரணமாகிவிடும். இந்த பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மிகவும் எளிமையான முறையில், வாட்டர் டேங்குகளை சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

25
water tank

பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிர்களை எதிர்க்கும் தன்மை கொண்ட நாவல் மரத்தின் துண்டுகளை தண்ணீர் தொட்டியில் போடுவது தண்ணீர் அசுத்தம் ஆகாமல் இருக்க உதவும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். ஜாமூன் மரம் எனப்படும் நாவற்பழ மரத்தில் இயல்பாகவே நோய் எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.

35
Water Tank Cleaning With Jamun Wood

தண்ணீர் தொட்டியில் ஜாமூன் மரத்துண்டைப் போட்டால், தண்ணீரில் வளரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சையை நீக்கி, நீண்ட காலத்திற்கு தூய்மையாக வைத்திருக்கும். இதைச் செய்தால் கிட்டத்தட்ட 10 வருடத்துக்கு தண்ணீர் தொட்டியில் பூஞ்சை பிரச்சனையோ தண்ணீர் கெட்டுப்போகும் பிரச்சனையோ இருக்காதாம்.

45
Water Tank Cleaning With Jamun Wood

வாட்டர் டேங்க்கில் நீர் கெட்டுப்போகாமல் இருக்க, ஜாமூன் மரத்துண்டை எடுத்து வந்து, நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் தொட்டியில் போட வேண்டும். குறைந்தது 200 கிராம் எடை உள்ள நாவல் மரத்துண்டை போட வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்கள்.

55
Water Tank Cleaning With Jamun Wood

மரத்துண்டுக்குப் பதிலாக நாவற்பழ மரத்தின் இலைகளையும் பயன்படுத்தலாம். ஆனால் ஜாமுன் மரத்துண்டு மிகவும் வலுவானது என்பதால் அதைப் பயன்படுத்துவது சிறந்தது. இந்த முறையில் பல ஆண்டுகளுக்கு தண்ணீர் தொட்டியில் பாக்டீரியா, பூஞ்சை போன்றவை ஏற்படாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

click me!

Recommended Stories