இந்தியாவில் மது அருந்துபவர்கள் கணிசமாக உள்ளனர். இந்தியாவில் மது விருப்பம் உள்ளவர்களில் ஒருவர், சராசரியாக 5.7 லிட்டர் மது அருந்துவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பண்டிகை நாளில் மது விற்பனை உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்திய மாநிலங்களில் மதுவிற்பனையும் அதன் விலையும் மாறுபடுகிறது. பல மாநிலங்களில் விலை அதிகமாகவும், சில மாநிலங்களில் குறைவாகவும் காணப்படுகிறது. ஆனால் எந்த விலையாக இருந்தாலும் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.
25
Alcohol Limit In Bus Travel In Tamil
மதுவின் விலை குறைவாக இருக்கும் மாநிலங்களில் இருந்து சிலர் மதுவை வாங்கி கொண்டு தங்கள் ஊருக்கு செல்வார்கள். இப்படி மதுவை பேருந்தில் கொண்டு செல்வதற்கு அனுமதி உண்டா என்பது குறித்தும் பலருக்கு தெரிவதில்லை. பேருந்தில் மதுபாட்டில்களை கொண்டு செல்லலாமா? எத்தனை பாட்டில்களை கொண்டு செல்லலாம்? என்பதை குறித்து இங்கு காணலாம்.
பேருந்தில் மது பாட்டில்களை கொண்டு செல்ல இந்தியாவில் தனி விதிகள் உள்ளன. இதனை கடைபிடித்து மதுவை கொண்டு சென்றால் அதில் சிக்கலில்லை. இந்த மாதிரி மதுவிலக்கு இல்லாத மாநிலங்களில் தான் கொண்டு செல்ல அனுமதி. மற்ற மாநிலங்களில் கொண்டு செல்ல முடியாது.
இந்தியாவில் சில மாநிலங்களில் மதுவை கொண்டு செல்லவும், விற்கவும் தடை உள்ளது. மதுவிலக்கு இல்லாத மாநிலங்களில் இரண்டு லிட்டர் வரை மதுவை கொண்டு செல்லலாம். இந்த அளவுக்கு மேல் மதுவை கொண்டு சென்றால் ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதம். அதுமட்டுமின்றி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உங்களுக்கு விதிக்கப்படலாம்.
45
Alcohol Limit In Bus Travel In Tamil
நடத்துநர் அனுமதி:
விலைகுறைவான மதுபானங்களை வாங்கி அவற்றை மற்றொரு இடத்திற்கு குறைந்த செலவில் கொண்டு செல்ல பேருந்து நல்ல தேர்வாக இருக்கும். ஆனால் பேருந்து நடத்துநர் நீங்கள் மது கொண்டு வருவதற்கு மறுப்பு தெரிவித்தால் அப்போது உங்களால் கொண்டு செல்ல முடியாது. ஏனென்றால் பேருந்து நடத்துநர் மறுத்தால் மதுவை கொண்டு செல்ல கூடாது என விதி உள்ளது.
பேருந்தில் மதுவை கொண்டு செல்ல விரும்பும்பட்சத்தில் செல்லுபடியாகும் பில்லை வைத்திருப்பது அவசியம். நீங் மதுபாட்டிலை வாங்கியதற்கான தகுந்த ஆதாரத்தைக் காட்டுவது முக்கியம். முறையான பில் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் முடிந்தவரை கவனமாக செயல்படுங்கள்.