
மாறிவரும் பருவத்திற்கு ஏற்ப சரும பராமரிப்பில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும். இதனால் தூசி மற்றும் அழுக்குகள் சருமத்தில் வேகமாக குவிந்து துளைகளில் படிந்து விடும். முகத்தில் அழுக்குகளை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் அதனால் முகத்தில் பருக்கள் தோன்றும். எனவே சருமத்தை பராமரிப்பது மிகவும் அவசியம்.
அந்த வகையில் தற்போது பெண்களைப் போலவே ஆண்களும் தங்களுடைய முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இதை அடைய நீங்கள் ரசாயனம் கலந்த பொருட்களை உங்களது முகத்தில் பயன்படுத்தி உங்களது முக அழகை கொடுத்துக் கொள்ளாதீர்கள்.
இதற்கு நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து உங்களது முகத்தை அழகாக பராமரிக்கலாம் தெரியுமா? அதுவும் ஒரே இரவில். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும், உங்கள் காதலியை சுலபமாக கவர்ந்து விடலாம்.
இதையும் படிங்க: ஆண்கள் தினமும் ஷாம்பு போட்டு குளிக்கலாமா?
ஆண்களின் எல்லா வகையான சருமத்திற்கான அழகு குறிப்புகள் இங்கே:
1. முகம் பொலிவாக..
இதற்கு ஒரு தக்காளியை நன்கு அரைத்து அதை வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதில் கொதிக்க வைத்து ஆற வைத்த கிரீன் டீ தண்ணீர், ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். நீங்கள் சுமார் ஐந்து நிமிடம் ஆவி பிடித்த பிறகு அந்த பேஸ் பேக்கை உங்கள் முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு முகத்தை கழுவினால் உங்களது முகம் பொலிவாகும்.
2. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க..
இதற்கு 2 ஸ்பூன் தக்காளி சாறு, ஓட்ஸ் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து, நன்கு கலந்து அதை முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகற்றப்படும். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.
3. முகப்பரு இல்லாத முகம் பெற..
இதற்கு இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, தயிர் மற்றும் சிறிதளவு சோடா உப்பு ஆகியவற்றை நன்கு கலந்து அதை முகத்தில் தடவி ஐந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி பருக்கள் ஏதும் இல்லாமல் முகம் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கும்.
4. முக் வறட்சியை போக்க..
இதற்கு ஒரு கிண்ணத்தில் 5 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தை மிதமான சூட்டில் இருக்கும் நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் வறண்டு போய் இருக்கும் உங்கள் முகம் மென்மையாக மாறுவதை நீங்கள் பார்ப்பீர்கள்.
5. முக சுருக்கத்தை போக்க..
பல ஆண்களிடம் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை முக சுருக்கம் தான். முக சுருக்கம் அவர்களது அழகை கெடுக்கும் மற்றும் அவர்களை வயது முதியவர்கள் போல் காட்டும். எனவே இதைப் போக்க பப்பாளி இலையை சின்னதாக நறுக்கி பிறகு தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக வந்ததும் அதை வடிகட்டி குடித்து வந்தால் முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக இருக்கும்.
இதையும் படிங்க: ஹேண்ட்ஸ்சம் பாய்ஸ் லுக் வேண்டுமா? இந்த 5 விசயங்களை மிஸ் பண்ணாதீங்க!!