குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் 'மோர்' கொடுக்கலாம்..  'எதை' கொடுக்கவே கூடாது தெரியுமா?

First Published | Nov 2, 2024, 12:29 PM IST

Parenting Tips : குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது அவர்களை ரொம்பவே கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்ன கொடுக்க் கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Loose Motion In Children

குழந்தைகளுக்கு வரும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. இது அடிக்கடி நிகழ்ந்தால் குழந்தைகளுக்கு சோர்வு ஏற்படும். இது பெரும்பாலும் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக தான் குழந்தைகளுக்கு வருகிறது. அதாவது குழந்தைகள் சாப்பிடுவது அல்லது குடிப்பதில் ஏதேனும் மோசமாக இருந்தால் இது மாதிரி நிகழும். 

Loose Motion In Children

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு சமயத்தில் அவர்களது உடலில் இருந்து நீர் மற்றும் தாதுக்கள் இழக்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக 
நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே வயிற்றுப்போக்கின் போது குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து வழங்குவது மிகவும் அவசியம். மேலும் அவர்கள் குணமடையும் வரை சிறிய அளவில் கூடுதல் திரவங்களை கொடுக்க வேண்டும். 

அந்த வகையில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயத்தில் என்ன கொடுக்கலாம் என்ன கொடுக்கக் கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

Tap to resize

Loose Motion In Children

வயிற்றுப் போக்கிற்கு சர்க்கரை தண்ணீர் கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் சர்க்கரை தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று பலர் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அப்படி சர்க்கரை தண்ணீர் கொடுப்பது உண்மையில் நல்லதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. ஏனெனில் சர்க்கரை நீரானது குடலுக்குள் தண்ணீரை இழுக்கிறது இது வயிற்றுப்போக்கை மேலும் அதிகரிக்கச் செய்யும். இது தவிர வாந்தியையும் அதிகரிக்கும். இதனால் குழந்தைக்கு நீரிழிப்பை மேலும் அதிகரிக்கும். குழந்தையின் உடலில் நீர் சுத்தி இல்லை என்பதற்காகவும் அவர்களது உடலுக்கு அதிக சத்து தேவை என்பதற்காகவும் சர்க்கரை தண்ணீர் ஒருபோதும் கொடுக்க வேண்டாம்.

Loose Motion In Children

குழந்தையின் வயிற்றுப்போக்கின் போது என்ன கொடுக்கலாம்?

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு சமயத்தில் அவர்களுக்கு ORS (oral rehydration solution) கொடுப்பது ரொம்பவே நல்லது ஏனெனில் இதில் உப்பு சர்க்கரை மற்றும் தண்ணீர் உள்ளது. இது குழந்தையின் உடலில் இறந்த நீர் மற்றும் தாதுக்களை திரும்ப கொடுக்கிறது. இது மருந்து கடைகளில் அதிகம் கிடைக்கும்.

இதையும் படிங்க:  குழந்தைங்க பல்லை சொத்தையாக்கும் '4' உணவுகள்..! முத்து போன்ற பற்களுக்கு டிப்ஸ்

Loose Motion In Children

குழந்தைக்கு வயிற்றுப் போக்கின் போது மோரும் கொடுக்கலாமா?

ஆம், வயிற்றுப்போக்கும்போது  குழந்தைக்கு மோர் கொடுப்பது ரொம்பவே நல்லது. ஏனெனில் மோரில் செரிமானத்திற்கு உதவும் பரோயாடிக்குகள் உள்ளது. அதுபோல இதில் இருக்கும் பொட்டாசியம் உடலில் உள்ள நீர் மற்றும் தாதுக்களை சமன் செய்ய உதவுகிறது. மேலும் தயிறு கால்சியம் மற்றும் புரோட்டின் இருப்பதால் அவை உடலை வலுவாக்கும். எனவே, குழந்தையின்  வயிற்றுப்போக்கின் போது மோர் கொஞ்சமாக கொடுக்கலாம்.

இதையும் படிங்க: ஒரு வயசான அப்பறமும்  குழந்தை நடக்கலயா? இந்த காரணமா கூட இருக்கலாம்!!

Loose Motion In Children

வயிற்றுப் போக்கின் போது குழந்தைக்கு என்ன கொடுக்கக் கூடாது?

பல சாறு சோடா போன்ற பிற சர்க்கரை உள்ள பானங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சில குழந்தைகளுக்கு பால் பொருட்கள் வயிற்றுப்போக்கை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே பால் பொருட்கள் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். அதுபோல நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் வயிற்றுப்போக்கை அதிகரிக்கச் செய்யும் என்பதால் அதையும் கொடுக்க வேண்டாம். முக்கியமாக வறுத்த மற்றும் காரமான உணவுகள் வயிற்றை கெடுக்கும் என்பதால் அவற்றையும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்

Latest Videos

click me!